`காங்கிரஸ் செய்ததை, பா.ஜ.க பின்தொடர்கிறது!' - உ.பி முதல்வரை விமர்சித்த மாயாவதிSponsored`பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குச் சென்று உணவு உட்கொண்டால், மக்களின் நிலையை உணர்ந்ததாக அர்த்தமாகிவிடாது' என உ.பி முதல்வரைக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், `கிராம் ஸ்வரஜ்யா யோஜ்னா' திட்டத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு நேற்று சென்றார். அந்தக் குடும்பத்தினருடன் இரவு உணவு உண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, சுல்தான்பூரில் உள்ள கோதுமை கொள்முதல் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளையும் நலம் விசாரித்தார். ஆய்வின்போது ஆவணங்களைச் சரிபார்ப்பது, நோயாளிகளிடம் நலம் விசாரிப்பது, குழந்தைக்கு உணவு ஊட்டுவது உள்ளிட்ட புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார். 

Sponsored


Sponsored


இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, `பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குச் சென்று உணவு உட்கொண்டால், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நிலையை உணர்ந்ததாக அர்த்தமாகிவிடாது. உண்மையில், அவர்கள் பட்டியலினச் சமூகத்தின் நிழலாகச் செயல்பட்டது இல்லை. வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சமமாக உணவு உட்கொள்வது; ஆய்வு மேற்கொள்வது எனப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். இத்தகைய செயல்களை முதலில் தொடங்கி வைத்தது காங்கிரஸ் கட்சிதான். தற்போது, பா.ஜ.க அதைப் பின்தொடர்கிறது. இந்த இரண்டு கட்சியினரும் நாணயத்தின் இரு பக்கங்கள்' என விமர்சித்திருக்கிறார்.
 Trending Articles

Sponsored