மம்தா முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு!மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு, தான் ஆதரவளிப்பதாகத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Sponsored


அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஏற்கெனவே பணிகளைத் தொடங்கிவிட்டது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் தனது கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடங்கிவிட்டது. இந்த இரண்டு கட்சிகளின் மேல் கடும் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கியுள்ளார். பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடுவுக்குப் பாராட்டு தெரிவித்து, ஆதரவும் அளித்தார். அதே போன்று அனைத்து மாநிலக் கட்சிகளிடமும் தொடர்ந்து 3 வது அணி குறித்து பேசி வருகிறார். 

Sponsored


இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க எப்போதும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் வலிமையான கூட்டாட்சிக்காகவும் துணை நிற்கும். பா.ஜ.க-வின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored