குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை! ஸ்டாலின் வரவேற்புSponsoredகுட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சி,பி.ஐ விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.முக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Sponsored


இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ``குட்கா வழக்கை சி.பிஐ விசாரணைக்கு மாற்றியது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரத்தில் உண்மை நிலவரங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் துணையாக இருந்துள்ளனர். எனவே, அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

Sponsored


குட்கா விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசுவதற்குக்குக் கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வழக்கு சிபிஐ-க்குமாற்றப்பட்டதால் இதில் தொடர்புடையவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில், சட்டப்படியான நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.”எனத் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து குட்கா விவகாரம் குறித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது என்பது இயல்பான ஒன்றுதான்’ என விளக்கமளித்துள்ளார்.  Trending Articles

Sponsored