கர்நாடகாவில் களமிறங்கும் யோகி... காங்கிரஸை வீழ்த்த பா.ஜ.க புது வியூகம்!கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் டார்கெட்டாக அமைத்திருக்கிறது. அதற்காக, கர்நாடகத் தேர்தல் களத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரசாரக் களத்தில் இறக்கியுள்ளது பா.ஜ.க 

Sponsored


ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துக் கணிப்பில் நம்பிக்கை இல்லை என்று கூறி களத்தில் இறங்கி, மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, யோகி ஆதித்யநாத் வருகை கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Sponsored


நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 224 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, வாகை சூட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தென் மாநிலங்களின் பா.ஜ.க ஆட்சி அமைக்கக் கடுமையாகப் போராடி வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டும் வகையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக, அவர், அடுத்த வாரம் ஆறு நாள் சுற்றுப்பயணமாகக் கர்நாடகா வர உள்ளார். 

Sponsored


உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையைக் கணித்துள்ள சித்தராமையா, பா.ஜ.க-வின் நட்சத்திர பேச்சாளராக யோகி இருந்தாலும் அவரின் வருகை கர்நாடகத் தேர்தலில் எதிரொலிக்காது. இது பா.ஜ.க-வுக்கு ஒரு மைனஸ் ஆகத்தான் அமையும் என்கிறார். இருப்பினும், லிங்காயத் சமூகத்தினர் மத்தியில், யோகியின் பேச்சு எடுபடலாம் என்றும் இது பா.ஜ.க-வுக்கு ஆதரவாக அமையும் என்று அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. 

முன்னதாக, சட்டசபைத் தேர்தலில் 100 இடங்களுக்குக் குறைவாகத்தான் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, முதல்வர் சித்தராமையா, கட்சியினரிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.Trending Articles

Sponsored