'ஏன் இவ்வளவு பதற்றம் மோடி' - சீனா சுற்றுப் பயணத்தை விமர்சித்த ராகுல்Sponsoredஉங்களின் சீனப் பயணத்தில் எந்த நோக்கமும் இல்லை என ஊடகங்கள் காண்பித்து வருகின்றன என்று பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப் பயணத்தை விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இந்தியா சீனா எல்லையில் சமீபகாலமாகப் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், சீனாவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு, சீனா அதிபர் ஜி.ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதிபரின் அழைப்பை ஏற்ற மோடி, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அங்கு சென்றுள்ளார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், முன்னதாக, அந்நாட்டு அதிபரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ''இரண்டு முறை தலைநகர் அல்லாத வேறு ஒரு ஊரில் என்னை வரவேற்றீர்கள். இதனால், இந்திய மக்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்'' எனக் கூறினார். 

Sponsored


Sponsored


இந்நிலையில், மோடியின் சீனப் பயணத்தை விமர்சித்து, ராகுல் ட்வீட் செய்திருக்கிறார். அதில்' உங்களின் சீனப் பயணத்தில் எந்த நோக்கமும் இல்லை என்று ஊடகங்கள் காண்பித்து வருகின்றன. இந்தப் பயணத்தில் மிகவும் பதற்றமாகக் காணப்படுகிறீர்கள். சீனா - பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் மற்றும் டோக்லாம் ஆகியவை இந்திய எல்லைப் பகுதிகள் ஆகும். இங்கு பதற்றம் நிலவுகிறது. அதனால், இந்த விவகாரம் தொடர்பாக அந்நாடு அதிபருடன் நீங்கள் பேச வேண்டும் என நினைவூட்டுகிறேன். இந்திய மக்களும் இதையே எதிர்பார்க்கிறார்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என ட்வீட் செய்திருக்கிறார்.Trending Articles

Sponsored