'நாங்கள் ஒதுக்கிய நிதிகள் எங்கே?!' - சித்தராமையாவை விமர்சித்த அமித் ஷா'மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய நிதிகளை, சித்தராமையா அரசு தனது பாகெட்டில் போட்டுக்கொண்டது. ஆனால், முதல்வரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு மட்டும் 40 லட்ச ரூபாய்' என்று விமர்சித்திருக்கிறார் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா. 

Sponsored


கர்நாடக சட்டசபைக்கு, வரும் மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க, பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். ' 224 தொகுதிகளிலும் பா.ஜ.க வெல்ல வேண்டும்' என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமித் ஷா, கர்நாடகாவில் தேர்தல் பணிகளைக் கவனித்துவருகிறார்.

Sponsored


இந்நிலையில், நேற்று கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, காங்கிரஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசும்போது, ''13-வது நிதி ஆணையத்தின் கீழ், கர்நாடக அரசுக்கு 88 ஆயிரத்து 583 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எங்கள் அரசும் கர்நாடக மாநில அரசின் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 19 ஆயிரத்து 506 கோடி ரூபாயை வழங்கியது. இந்த நிதிகளை சித்தராமையா அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காகச் செலவிடவில்லை.

Sponsored


விவசாயிகள் தொடர்ந்து தற்கொலைசெய்துகொண்டுவருகின்றனர். மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. மத்திய அரசு வழங்கிய நிதிகளைத் தனது பாகெட்டில் போட்டுக்கொண்டனர். கர்நாடகா மக்கள், போதுமான மின்சாரம் இல்லாமலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள போதுமான வேலைவாய்ப்புகளும் இல்லாத நிலையில் உள்ளனர். ஆனால், சித்தராமையா கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு மட்டும் ரூபாய் 40 லட்சம். சித்தராமையாவை நம்பித்தான் காங்கிரஸ் உள்ளது என்ற நிலை வந்துவிட்டது'' என விமர்சித்தார். Trending Articles

Sponsored