`டோன்ட் வொர்ரி.. விடுமுறையை கொண்டாடுங்கள்!' -சித்தராமையாவின் ஜாலி ட்வீட்



கர்நாடக தேர்தலில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தைபற்றி கவலைப்படாமல் விடுமுறையைக் கொண்டாடி மகிழுங்கள் தொண்டர்களே என முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார். 

Sponsored


கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று (12.5.2018) நடந்தது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 15-ம் தேதி நடைபெறுகிறது. 

Sponsored


தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக உழைத்தனர். முன்னதாக, தேர்தலுக்குமுன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தேர்தலுக்குப்பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய 2 கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவையே அமையும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். அவர்களை, உற்சாகப்படுத்தும் வகையில் முதல்வர் சித்தராமையா ட்வீட் ஒன்றைத் தட்டியிருக்கிறார். 

Sponsored


அதில், ``அடுத்த இரண்டு நாள்களுக்கு தேர்தலுக்குப்பின் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள்தான் நல்ல பொழுதுபோக்காக இருக்கப் போகிறது. தேர்தலுக்குப் பின் வெளியிடப்படும் கருத்து கணிப்பை நம்புவது, நீந்தத் தெரியாத ஒருவர் ஆற்றின் ஆழம் சராசரியாக 4 அடி என்று புள்ளியியலாளர் சொன்னதை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமமாகும். ஆற்றில் 6+4+2 அடி என்கிற ரீதியில் இருந்தால் மட்டுமே சராசரி ஆழம் 4 அடியாக இருக்கும். இதனால், 6 அடி ஆழம் ஆற்றில் வரும்போது, நீரில் மூழ்க வேண்டியதுதான். ஆகவே, அன்புக்குரிய கட்சித் தொண்டர்களே ஆதரவாளர்களே, டோன்ட் வொர்ரி.. தேர்தலுக்குப் பின் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் குறித்து கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.  



Trending Articles

Sponsored