கர்நாடகத் தேர்தலில் கடும் போட்டி..! கோயில் பூஜைகளில் குவிந்த தொண்டர்கள் #KarnatakaVerdictகர்நாடகத் தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது. மும்முனைப் போட்டியில் பா.ஜ.க., காங்கிரஸ்., மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் உள்ளன.  தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று தொண்டர்கள் கோயில்களில் பூஜையில் ஈடுபட்டுள்ளார்கள். 

Sponsored


Sponsored


கர்நாடக மாநிலத்தில், 222 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் கடந்த மே 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதனால், தொண்டர்கள், ஆதரவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க-வும் உள்ளதால், இரு கட்சியினரும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

Sponsored


முன்னதாக, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பதாமி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஶ்ரீராமலு, தனது வீட்டில் கோ பூஜை செய்தார். முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சித்தராமையா பின்னடைவில் உள்ளார்.

தற்போது, தொண்டர்கள் பூஜை செய்துவரும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிவருகின்றன.Trending Articles

Sponsored