டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் - பாடம் புகட்டிய தமிழர்கள் 



தமிழர்கள் மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் வாட்டாள் நாகராஜ் கர்நாடகத் தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளார்.

Sponsored


கர்நாடகத் தேர்தலில் யார் ஆட்சி அமைப்பது என்ற போட்டி பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் நடந்துவருகிறது. 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.க-வுக்குத் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 76 இடங்களில் முன்னிலையிலிருக்கும் காங்கிரஸும் 39 இடங்களில் முன்னிலையிலிருக்கும் ம.ஜ.த-வும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர். 

Sponsored


இந்தக் களேபரத்தின் நடுவில் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் கன்னட சலுவாளி வாட்டாள் பக்‌ஷா கட்சித் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ், சாம்ராஜ் நகர் தொகுதியில் படுதோல்வியடைந்துள்ளார். அவருக்கு 5,977 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளன. இதனால் டெபாசிட்டையும் அவர் இழக்க நேரிட்டுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புட்டங்கரெட்டி 75,963 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

Sponsored


வாட்டாள் நாகராஜ் தோல்விக்கு என்ன காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகையில், `சாம்ராஜ் நகர் தொகுதியில், தமிழர்களின் ஓட்டுகள் அதிகம். தமிழர்களுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்துவரும் வாட்டாள் நாகராஜ், தமிழில் பேசி ஓட்டு கேட்டார். இருந்தபோதிலும் அவர் மீதுள்ள அதிருப்தி காரணமாகச் சொற்ப ஓட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளன’ என்றனர்.

எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினி எனத் தமிழக ஹீரோக்களின் பல படங்களை கர்நாடகாவில் திரையிட வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தாளவாடி, ஒகேனக்கல், காவிரி போன்ற நதி விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்தான் இந்த வாட்டாள் நாகராஜ். அவருக்கு இந்தத் தேர்தலில் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் சாம்ராஜ் நகர் தொகுதி தமிழர்கள்.



Trending Articles

Sponsored