`பழசு வேண்டாம்... 19 லட்சத்துக்குப் புது கார் வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்!’ ஆர்.டி.ஐ. தகவல் #VikatanExclusive



ஆர்.சி. சக்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து, 1979-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `தர்மயுத்தம்'!  இந்தப் படத்தின் புகழைவிட எவரெஸ்ட் புகழ் பெற்றது ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய `தர்மயுத்தம்'! பன்னீரின் தர்மயுத்துக்குப் பிறகுதான், 2017 பிப்ரவரியில் அவரின் இமேஜ் கிராப் உயர்ந்தது. இப்போது அதள பாதாளத்தில். 

ஜெயலலிதா புதைக்கப்பட்ட கடற்கரை சமாதி, பன்னீரின் தியானத்துக்குப் பிறகு மீடியாக்களின் பீட் ஆனது. தர்மயுத்தத்துக்குப் பிறகுதான் சசிகலாவும் சமாதிக்கு அடிக்கடி விசிட் அடித்தார். பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போவதற்கு முன்பு, அந்தச் சமாதியில்தான் அடித்து சத்தியம் செய்தார். இவ்வளவு அரசியல் நகர்வுகள் நடப்பதற்கு மையப் புள்ளி பன்னீர்செல்வம்.

Sponsored


சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதிக்கேட்டு, உண்ணாவிரதம் இருந்தார். மோடியை அடிக்கடிப் போய் பார்த்தார். பன்னீரிடம் இருந்த எம்.எல்.ஏ-க்கள் 12 பேரில் சிலர் கழன்றுகொள்ள ஆரம்பித்தார்கள். துணை முதல்வர் பதவி கிடைத்தப் பிறகு `தர்மயுத்தம்' முடிவுக்கு வந்தது.  

Sponsored


Sponsored


``எடப்பாடி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது’’ எனக் கர்ஜித்த ஓ.பன்னீர்செல்வம், ரிவர்ஸ் கியர் போட்டு, எடப்பாடியுடன்  கைகுலுக்கித் துணை முதல்வர் ஆனார். `தர்மயுத்தம்' தொடங்கி பல்டியடித்த பன்னீருக்குப் பரிசு தர வேண்டாமா? நாஞ்சில் சம்பத்துக்கு `இனோவா' கிடைத்தது போல, துணை முதல்வர் ஆன பன்னீருக்குப் புத்தம் புது `இனோவா'வை பார்சல் செய்திருக்கிறது எடப்பாடி அரசு. `முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய பழைய காரைப் பயன்படுத்த மாட்டேன்' எனப் பன்னீர் சொன்னதால்தான் புதிய காரை அளித்திருக்கிறார்களாம். அவர் முதல்வராக இருந்தபோது அரசின் சார்பில் பயன்படுத்திய TN 05 BG 2345 என்ற இனோவா காரை தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்குக் கொடுத்துவிட்டார்கள்.  

பன்னீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் புதிய காரின் பதிவு எண் TN 06 BG 2345. அதாவது அவர் ஏற்கெனவே பயன்படுத்திய காரின் பதிவு எண்ணில் (TN 05 BG 2345) பெரிய மாற்றம் எதுவும் செய்யவில்லை. 06 மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது பன்னீருக்கு ராசியான நம்பரைக் கேட்டு வாங்கியிருக்கிறார்.  

பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனபோது அவருடன் அவருடைய ஆதரவாளர் பாண்டியராஜனுக்கும் மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. பாண்டியராஜன் ஏற்கெனவே அரசின் சார்பில் பயன்படுத்திய TN 01 CG 5555 பதிவு எண் கொண்ட இனோவா காரை முதலமைச்சர் எடப்பாடி அலுவலகத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டார்கள். 

INNOVA CRYSTA 2.4Z PACKAGE 7 SEATER மாடல் கொண்ட இந்தப் புதிய இனோவா கார் ஒன்றின் விலை 19 லட்சத்து 46 ஆயிரத்து 70 ரூபாய். இரண்டு கார்களின் மொத்த விலை 38 லட்சத்து 92 ஆயிரத்து 140 ரூபாய். 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விகடன் வாங்கிய தகவலில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படி அரசு வழங்கிய தகவலிலும் குழப்பங்கள். பன்னீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் புதிய காரின் பதிவு எண் TN 06 BG 2345. ஆனால் அவர் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் காரை நாம் படம் எடுத்தபோது அதில் இருந்த பதிவு எண் TN 06 DG 2345. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தரப்பட்ட தகவல் தவறா? அல்லது காரில் எழுதப்பட்டிருக்கும் எண் தவறா? எனத் தெரியவில்லை.

INNOVA CRYSTA 2.4Z PACKAGE 7 SEATER மாடல் கொண்ட இந்தப் புதிய இனோவா கார் ஒன்றின் விலை 19 லட்சத்து 46 ஆயிரத்து 70 ரூபாய். வரி எல்லாம் சேர்க்காமல் இந்தத் தொகையை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வரி கட்டினார்களா என்கிற விவரம் எல்லாம் இல்லை.



Trending Articles

Sponsored