ம.பி-யில் பா.ஜ.க-வை வீழ்த்த வியூகம் - மாயாவதியுடன் கைகோக்கும் காங்கிரஸ்



Sponsored



கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றியதுபோல காங்கிரஸ், மத்தியப் பிரதேசத்திலும் பா.ஜ.க-வை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளது. 

(PC-NDtv)

Sponsored


மத்தியப் பிரதேச மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இங்கு, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிசெய்துவருகிறது. இங்கு, தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சிசெய்துவரும் பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி அலை உருவாகியுள்ளது. அங்கு, பா.ஜ.க - காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. இதனால், இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்த, மாயாவாதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்றுவருகிறது. 

Sponsored


இதுதொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்திலும், சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை கூட்டு சேர்ந்துள்ளன. எனவே, மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழ வாய்ப்புள்ளதாக அம்மாநில உள்ளூர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 



Trending Articles

Sponsored