தினகரன் கோரிக்கை நிராகரிப்பு! - அ.தி.மு.க சட்ட விதிகள் திருத்தத்துக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்



அ.தி.மு.கவின் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

Sponsored


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். பின்னர், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை ஓரங்கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில், சசிகலா நீக்கம், பொதுச்செயலாளர் பதவியே இல்லை, கட்சியிலிருந்து ஒருவரை நீக்க, சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்ட விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு கடந்த ஏப்ரலில் அ.தி.மு.க தலைமை அனுப்பி வைத்தது. 

Sponsored


இந்தநிலையில், அ.தி.மு.க சட்ட விதிகள் திருத்தத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. மேலும், அந்த பதவிக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கே இருக்கும். உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி வரும் அ.தி.மு.க, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் பொதுக்குழுவைக் கூட்டி புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் ஈடுபடும்  என தெரிகிறது. 
 

Sponsored




Trending Articles

Sponsored