தி.மு.க முன்னாள் அமைச்சர் மகனுக்கு பேனர் மூலம் வாழ்த்து! பா.ம.க நிர்வாகி நீக்கம்



வன்னியர் சங்கத் தலைவர் குரு உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்தார். குருவுக்கு சிகிச்சை அளித்த பிரச்னையில் பா.ம.க-வின் தலைமைக்கும், குருவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. 

Sponsored


குருவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம்  காடுவெட்டியில் வைக்கப்பட்டிருந்த குருவின் உடலுக்கு தி.மு.க முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பக்கத்து ஊர்காரர், கட்சிக்கு அப்பாற்பட்ட நண்பர் என்ற முறையில் முதன் முதலில் கலந்துகொண்டு அஞ்சலி  செலுத்தினார்.

Sponsored


இந்நிலையில் குறிஞ்சிப்பாடியில் கடந்த மாதம் 29-ம் தேதி பா.ம.க பொதுக் கூட்டம் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை விமர்சித்து தரக்குறைவாக ஒருமையில் பேசினார். இந்தப் பிரச்னை பேஸ் புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.  

Sponsored


இந்நிலையில், கடந்த 7-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன்  எம்.ஆர்.கே.பி.கதிரவன் பிறந்த நாளுக்கு கட்சி பாகுபாடின்றி தி.மு.க., த.வா.க, காங்கிரஸ், பா.ம.க என அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் படம் போட்ட வாழ்த்து டிஜிட்டல் பேனர் விருத்தாசலம் நகரில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பேனரில் இடம் பெற்றிருந்த விருத்தாசலம் பா.ம.க முன்னாள் நகரத் தலைவர் சீனிவாசனை கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்குவதாக பா.ம.க கட்சித் தலைவர் மணி நேற்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்ததில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகன் கதிரவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர் வைத்ததால் சீனிவாசனை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கின்றனர்.



Trending Articles

Sponsored