”பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் அழிந்து போனது” - ப. சிதம்பரம் தாக்கு!



கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடலூர் மாவட்ட தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி அழகிரி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். 

Sponsored


ப. சிதம்பரம், "தமிழகத்தில் பெரியார், அண்ணா என்று பெயர்களை சொல்லும் போது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதேபோல் காமராஜர் பெயரை சொல்லும் போதும் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மிகவும் பின் தங்கிய ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். என்னைப் பொறுத்தவரை  நான் பிறந்த நாளை கொண்டாடுவது கிடையாது. ஏன் என்றால் பிறந்த நாள் விழா என்பது ஒரு தனி மனினுக்கு எடுக்கும் விழா. ஆனால் காமராஜர் பிறந்த நாள் விழா என்பது ஒரு மனிதனுக்கு எடுக்கும் விழா அல்ல, ஒரு வாழ்ந்த தெய்வத்திற்கு, ஒரு வாழ்க்கை பாடத்திற்கு எடுக்கும் விழா இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து 31 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று ஆட்சி செய்கிறது. பாரதிய ஜனதா கட்சியில் முன்பு 6 ஆண்டுகள் வாஜ்பாய் ஆட்சி செய்தார், ஆனால் இன்று நடப்பது போல் நிகழ்ச்சிகள் அன்று அவர் ஆட்சியில் நடக்கவில்லை. இன்று சிறுவர்கள், பெண்கள் மீது வன்கொடுமை, பட்டியல் இனத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இதெல்லாம் வாஜ்பாய் ஆட்சியில் நடக்கவில்லை. 4 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது? இந்த ஆட்சியில். நல்ல காலம் வரப்போகுது, நல்ல காலம் வரப்போகுது என்று குடு குடுப்பகாரன் போல் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திரமோடி. என்ன நல்ல காலம் நடக்கிறது? பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் நாங்கள் ஆட்சியில் இருந்த போது இருந்ததைவிட பெட்ரோல், டீசல் வரி ரூ 10 அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்னால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த விநோதம் இந்தியா தவிர வேறு எங்கேயும் நடக்காது.  இது போல் கூடுதல் வரி விதிப்பின் மூலம் இந்த அரசிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
                          
எங்க போச்சு இந்த பணம். எத்தனை வாக்குறுதி தந்தார்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார்கள். உலகில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டுவந்து உங்கள் வங்கி கணக்கில் போடப்படும்  என்றார். கவலைப்படாதீர்கள் வரும் திங்கள் கிழமை உங்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும்  ரூ 15 லட்சம் போடப்படும் என்று நரேந்திரமோடி என்னைப் சொல்ல சொன்னார், நான் சொல்கிறேன்.  அடுத்த வாக்குறுதி 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னார், உருவாக்கியிருக்கிறாரா?.  கடந்த 6 மாதத்தில் யாருக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? எங்க   வேலை என்று கேட்டால் பங்கோடா சுட்டு விற்பது வேலை என்கிறார்.  அடுத்த வாக்குறுதி விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்றார். ஆட்சிக்கு வந்து   4 வருடம் முடிந்துவிட்டது. என்ன நடந்துள்ளது.  அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர்  அருண்சுப்பிரமணியன் தனது ஆய்வு அறிக்கையில் எழுதியிருக்கிறார், விவசாயிகளின் வருமானம் குறைந்திருக்கிறது என்று. நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. நான்காண்டுகள்  முடிந்துவிட்டது.  நாங்கள் ஆட்சி செய்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாராதம் 7.4 சதவீத வளர்ச்சி அடைந்தது. சுதந்திர இந்தியாவில் இது போன்ற வளர்ச்சி இது வரை ஏற்பட்டதே கிடையாது. இந்தப் பத்து ஆண்டுகளில் சுனாமி வந்தது.  நாங்கள் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் சமாளித்தோம். இன்று வங்கியில் 10 லட்சத்து 30 ஆயிரம் கோடி  ரூபாய் வராகடன் 30 ஆயிரம் கோடி, 25 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போகின்றனர். அது எப்படி இவ்வளவு பெரிய தொகை கடன் தருகிறீர்கள். எப்படி வசூல் செய்யாமல் இருக்கிறீர்கள். வங்கிகள் கடன் கொடுப்பது கிடையது. வரா கடன் கூடிக்கொண்டே போகிறது. இன்று ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி கூடியுள்ளது. வர்த்தக பற்றாக்குறை கூடி கொண்டே போகிறது. நமது இந்தியா பொருளாதாரத்தை பற்றி கவலைப்ட ஆளே கிடையாது. நமது பிரதமர் நரேந்திரமோடி ரூ 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். என்ன பைத்தியகாரதனம் இது. இந்த முடிவு அமைச்சர்களுக்குத் தெரியாது, உயர் அதிகாரிகளுக்குத் தெரியாது திடீரென தொலைக்காட்சியில் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் செல்லாது என அறிவிக்கிறார். இது ஏன் என்றால் கள்ள பணம், கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கூறுகிறார். கள்ள பணம், கருப்புப் பணம் ஒழிந்ததா? என்ன நடந்தது நமது சிறு, குறு தொழில்கள் அழிந்து போனது. நாம் நமது பணத்தை எடுக்க காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக தொழில் துறை அமைச்சர் சட்ட மன்றத்தில் பண மதிப்பிழப்பு காரணமாக 5 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என அறிவித்துள்ளார். ஒரு மாநிலத்தில் இந்த நிலை என்றால், இந்தியாவில் 29 மாநிலங்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி வரி கொண்டுவந்தார்கள். நாங்கள் கொண்டு வந்த ஜிஎஸ்டி வேறு, ஆனால்

Sponsored


                       
 இவர்கள் கொண்டு வந்தது வேறு. இதில் மாதம் 3 முறை ரிட்டன் செய்ய வேண்டும் என்கிறார்கள். நான் எந்த ஊருக்குச் சென்றாலும் வணிகர்கள் என்னைப் பார்த்து கேட்கின்றனர். இதில் இருந்து வெளியேற வழி சொல்லுங்கள் என்று, கசக்கி பிழிந்து சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏன் ஜிஎஸ்டி என்று ஏன் பெயர் வைக்கிறீர்கள், அமித் ஷா வரி, தமிழிசை வரி என்று வையுங்கள் ஏன் ஜிஎஸ்டி என்று வைத்து பெயரை கெடுக்கிறீர்கள். தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறது அதைப்பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. ஒரு வாரமா திடீரென்று நிலமை மாறிவிட்டது ஊழல் என்கின்றனர். ஏன் இதுவரை தெரியாதா? பட்டியல் இனத்தவர்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் அச்சமில்லாமல் வாழ வேண்டும்.  சுந்தந்திரமான இந்தியாவை, அச்சமில்லாத இந்தியாவை மீண்டும்  உருவாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என்றார்.   
 

Sponsored




Trending Articles

Sponsored