‘மோடி அரசுக்கு ரிவர்ஸ் கவுண்டன் தொடங்கிவிட்டது’ - கொந்தளிக்கும் சோனியா காந்தி



மோடி அரசுக்குப் பின்னடைவுக்கான நேரம் தொடங்கிவிட்டதாக இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Sponsored


புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி  கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.  வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் வியூகம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Sponsored


Sponsored


இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி பேசும் போது, “மோடி அரசு  பின்னடைவை சந்திப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது. ஏழைகளுக்கு எதிராக அச்சமும், நிலையற்ற தன்மையும் திணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்களை நாம் காப்பாற்றியாக வேண்டும். இந்த முயற்சியில் கூட்டணி கட்சிகளைச் சேர்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஒடுக்கப்பட்டார்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 



Trending Articles

Sponsored