இப்படிச் செய்தால் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா? தினகரன் தம்பிமீது பாயும் அ.தி.மு.கSponsoredசசிகலாவின் அக்காள் மகனும் தினகரனின் தம்பியுமான பாஸ்கரன், தஞ்சாவூரில் எம்ஜிஆரின் 101 - வது பிறந்த நாளை கொண்டாடுவதோடு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவியும் வழங்க உள்ளார். இதற்காக, பாஸ்கரனை  வரவேற்று  அவரின் ஆதரவாளர்களால் எம்ஜிஆர் படத்துடன் பாஸ்கரன் இருப்பதுபோல வைக்கப்பட்டுள்ள ஃப்ளெக்ஸ்களால் தஞ்சாவூர் நகரமே திணறி வருகிறது. ஏழைகளுக்காக வாழ்ந்தவரின் படத்தைப் போட்டு, இப்படி பந்தா பண்ணுகிறார்களே என கடும் வேதனைகொள்கிறார்கள் எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகள்

சசிகலாவின் அக்காள் மகனும் தினகரனின் தம்பியுமான பாஸ் என்கிற பாஸ்கரன், ’தலைவன் பாஸ் பாசறை’ என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அதோடு, தினகரனுக்கு எதிராகவும் செயல்பட்டுவருகிறார். இவர் தற்போது, மாவட்டம்தோறும் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளைக் கொண்டாடி,  நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார். தஞ்சாவூரில் நாளை நடைபெறும் விழாவுக்கு  வருகைபுரியும்  பாஸ்கரனை வரவேற்கும் விதமாக, ஃப்ளெக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், எம்ஜிஆரைப் போலவும் அவருடன் பாஸ்கரன் இருப்பது போலவும் வைத்துள்ள ஃப்ளெக்ஸ்கள் தான் எம்ஜிஆரின் தொண்டர்களை வேதனையடையச் செய்துள்ளது.

Sponsored


எம்ஜிஆர் விசுவாசிகள் சிலரிடம் பேசினோம், எம்ஜிஆர் எதைச் செய்தாலும் ஏழைகளை மனதில் வைத்தே செய்வார். அதனாலேயே அவரை பொன்மனம் படைத்த செம்மல் என்று எல்லோரும் அழைத்தனர். இன்று பலரும் அவரின் பெயரைச் சொல்லி அவரைப் போலவே இருப்பதுபோலவும், ஏழைகளுக்கு உதவுவதுபோலவும் காட்டிக்கொள்கிறார்கள். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கரன் எது வேண்டுமானலும் செய்துகொள்ளட்டும்; ஏழைகளுக்கும் உதவட்டும். ஆனால், தன்னை எம்ஜிஆர் போல காட்டிக்கொள்ளவதை மட்டும் செய்யாமல் இருக்க வேண்டும். இது போன்ற ஆடம்பரம் செய்கிறவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்றனர்.

Sponsored


இதுகுறித்து பாஸ்கரன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம், 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள், இன்னும் எம்ஜிஆரின் நூற்றாண்டு  நிறைவு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடவில்லை. இதுவரை அரசு சார்பில் எடுக்கப்பட்ட எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  புகழ்பாடும் விழாவாகவே இருந்தது. ஏழைகளுக்காக வாழ்ந்த அவர்மீது அக்கறைகொண்டு, ஏழைகள் படும் கஷ்டங்களை உணர்ந்து பல திட்டங்களைக் கொண்டுவந்தவரின்  நூற்றாண்டு விழா  பிறந்தநாளை பல நூறு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகக் கொண்டாடி வருகிறோம். ஏற்கெனவே, சில மாவட்டங்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. நாளை, தஞ்சாவூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில்  நடைபெறும் விழாவில் பாஸ் கலந்துகொண்டு, சுமார்  600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். உண்மையாக ஏழைகளுக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் தான். பாஸ் ஆரம்பத்திலிருந்தே எம் ஜிஆரை பின் தொடர்ந்துதான் செயல்பட்டுவந்தார் இனியும் அப்படிதான் இருப்பார்' என்றனர்.Trending Articles

Sponsored