‘ஒவ்வொரு இந்தியனும் இதைத்தான் கேட்கிறான்’ - நிதின் கட்காரிக்கு ராகுல் பதிலடி!''எங்கே வேலை?'' என்ற நிதின் கட்காரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பதிலடிகொடுத்துள்ளார். 

Sponsored


மகாராஷ்டிராவில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்து, தற்கொலைச் சம்பவங்களும் நடைபெற்றன. 

Sponsored


இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று ஔரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மராத்தா சமூகத்தினரின் போராட்டம் குறித்துப் பேசிய அவர், “ 16 சதவிகித இடஒதுக்கீடு தாராளமாகக் கொடுக்கலாம். ஆனால், ஐ.டி துறை வந்த பிறகு, அரசு வேலைவாய்ப்புகள் முற்றிலும் குறைந்துவிட்டன. வங்கிகளிலும் வேலை குறைந்துவிட்டது. வேலை எங்கே இருக்கிறது?” எனப் பேசினார். 

Sponsored


இவரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிதின் கட்காரியின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்து, ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். ராகுல் பதிவிட்டுள்ள கருத்தில், ‘மிகச் சிறந்த கேள்வி கட்காரி ஜி, ஒவ்வொரு இந்தியனும் இதே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறான். எங்கே வேலை?’ எனப் பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored