‘தமிழகத்தைக் காப்பாற்ற நாங்கள் அணை கட்டவில்லை!’ - சர்ச்சை கிளப்பும் குமாரசாமிSponsored`தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கும்,தமிழகத்தைக் காப்பாற்றவும் நாங்கள் அணை கட்டவில்லை’ என கர்நாடக முதல்வர் குமாரசாமி மிகவும் சர்ச்சையாகப் பேசியுள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி தான் முதல்வராகப் பதவியேற்ற பிறகு வெறும் 82 நாள்களில் சுமார் 40 கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாள்களாகக் கர்நாடக மாநிலத்தைச் சுற்றியுள்ள சில கோயில்களுக்கு அவர் குடும்பத்துடன் சென்று வருகிறார். நேற்று முன் தினம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலுக்குச் சென்றார். இதையடுத்து புத்தூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குக் கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்குச் சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. 

Sponsored


தரிசனத்துக்குப் பிறகு கோயிலின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இந்த வருடம் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போன்று எப்போதும் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியத்திடம் மனு அளித்துள்ளது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் அணை கட்டியது தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கு அல்ல. தமிழக அரசின் கோரிக்கையை மேலாண்மை வாரியம் நிராகரிக்க வேண்டும். மேலும், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறினால் தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும்” எனக் கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored