`அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?’ இன்று கூடுகிறது அ.தி.மு.க செயற்குழு கூட்டம்Sponsoredஅ.தி.மு.க-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க இன்று செயற்குழு கூட்டம் கூட உள்ளது. 

அ.தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று மாலை சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்தக்கூட்டம் நடைபெற உள்ளது. 

Sponsored


இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் அடுத்தகட்ட நகர்வுகள், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், கட்சியில் காலியாக உள்ள பொறுப்புகளை நிரப்புதல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரவிருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது, தேர்தல் வியூகங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகத் தெரிகிறது. 

Sponsored


இந்தச் செயற்குழு கூட்டம் கடந்த 20-ம் தேதியே நடைபெற இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு காரணமாக இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் முன்னதாக அனுப்பப்பட்ட அழைப்பிதழோடு வர வேண்டும் என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.Trending Articles

Sponsored