`சுஷ்மா துறையில் பிரதமர் அலுவலகம் ஆதிக்கம்!’ - ராகுல் விமர்சனம்Sponsored``சுஷ்மா ஸ்வராஜூக்கு மக்களின் விசாவுக்காக தனது நேரத்தைச் செலவிடுவதைத் தவிர வேறு வேலை இல்லை'' எனக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியாக அதன் தலைவர் ராகுல் காந்தி 4 நாள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மையத்தில் (IISS) பேசிய ராகுல் காந்தி, மோடி அரசின் செயல்திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார்.

அதில் பேசிய அவர், `` நீங்கள் ஒரு விஷயத்தை உற்றுக் கவனித்தால் உங்களுக்கு ஒன்று புரியும். மத்திய வெளியுறத்துறை அமைச்சர் விசா வழங்கும் வேலையில்தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் அவருக்கு இதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. பிரதமர் அலுவலகம் வெளியுறவுத்துறை அமைச்சரின் அலுவலகத்திலும் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. சுஷ்மா மிகவும் திறமையானவர். அவருக்கு உண்மையில் அதிகாரம் அளித்தால் அவரது துறையில் செயல்பட்டு வரும் ஆதிக்கத்தை உடைத்தெறிவார்” என ராகுல் பேசியுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored