2019 தேர்தலில் மோடிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி? அமெரிக்க ஆய்வாளர் சொல்லும் தகவல்கள்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கான வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Sponsored


2019 ஆம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெரும் வாய்ப்பு குறைந்துள்ளதாக அமெரிக்க  பொருளாதார ஆய்வாளராக ருசியர் ஷர்மா தெரிவித்துள்ளார். ‘சாலையில் ஜனநாயகம்’ என்ற தன் புத்தகத்துக்காக நடத்திய ஆய்வின் போது இதை வெளியிட்டுள்ளார்.  

Sponsored


அதில் கூறப்பட்டுள்ளதாவது, 2014-ம் ஆண்டு 31 சதவிகித ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வெற்றி பெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடந்தன ஒவ்வொரு கட்சிக்குமான ஓட்டு சதவிகிதம் குறைந்ததால் மோடி எளிதில் வெற்றி பெற்றார். 99 சதவிகிதமாக இருந்த மோடியின் வெற்றி வாய்ப்பு 2017-ம் ஆண்டுக்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதே காரணம். தற்போது மோடி வெற்றி பெற 50 சதவிகிதமே வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஷர்மா, “ தற்போது 50:50 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் நிறையக் கூட்டணி எதிர்பார்க்கப்படலாம். இது புதிய இந்தியாவை உருவாக்கும் என காட்டுகிறது” இவ்வாறு கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored