``தி.மு.க செயல் தலைவர் பதவி நீக்கப்படுகிறது” -பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!



ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவரான பின்பு முன்னதாக அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. 

Sponsored


தி.மு.க-வின் தலைவர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தலைவராக மு.க ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.முக. பொதுக் கூட்டத்தில் மு.க ஸ்டாலினை தலைவராக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. அன்பழகன். 

Sponsored


இது குறித்து அவர் பேசும்போது, `` தி.மு.க தலைவர் பதவிக்கு இதுவரை வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் 1,307 பேர் வேட்பு மனுவை முன் மொழிய கருணாநிதியின் மகன் மு.க ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” எனக் கூறினார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மேடையில் அமர்ந்திருந்த அன்பழகன் பொன்னாடை போர்த்தி ஸ்டாலினுக்கு மரியாதை செய்தார். இதையடுத்து. ஸ்டாலின் வகித்து வந்த செயல் தலைவர் பதவி கட்சி விதிப்படி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Sponsored


கடந்த வருடம் தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல்  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க-வுக்கு ஸ்டாலின் தலைமை அவசியம் என மாவட்டச் செயலாளர்கள் கூறினர். ஆனால், கருணாநிதி உயிரோடு இருக்கும்வரையில் வேறு ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என அழகிரி போர்க்கொடி உயர்த்தியதன் விளைவாக, செயல் தலைவராக ஸ்டாலினை முன்மொழிந்தது தி.மு.க பொதுக்குழு.  இதையடுத்து 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி செயல் தலைவராக பொறுபேற்றார் ஸ்டாலின். இதற்கு முன்னதாக துணை முதல்வர், மேயர், அமைச்சர், தி.மு.க பொருளாளர், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க இளைஞரணி மாநிலச் செயலாளர் என பல பதவிகளில் ஸ்டாலின் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Trending Articles

Sponsored