`ஏரி மட்டுமல்ல, எங்க வாழ்க்கையும் வறண்டு கிடக்குது!’- ஸ்டாலினிடம் தழுதழுத்த விவசாயிSponsoredகாவிரியில் அதிக அளவில் தண்ணீர் வந்தும் அரசின் மெத்தனத்தால் கடைமடைப் பகுதிகள் வறண்டு கிடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அவரிடம் விவசாயி ஒருவர், `கல்லணைக்கு அருகில் உள்ள எங்களுக்கே இந்த நிலைமை என்றால் கடைக்கோடி கடைமடைப் பகுதி விவசாயிகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்' என தழு தழுக்க கூறினார்.

கடந்த மாதம் மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆறு, குளங்கள், ஏரிகள் என அனைத்தையும் தமிழக அரசு தூர் வாரி ஒழுங்காக நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் கரை புரண்டு ஓடினாலும் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் போய்ச் சேரவில்லை. இதனால் சுமார் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டு வீணாகக் கடலில் கலந்தது. இதைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Sponsored


இந்தச் சூழ்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் கடைமடைப் பகுதிகளைப் பார்வையிட்டார் அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் வந்தனர். இதற்காக செங்கிப்பட்டியில் வறண்டு முட்புதராக கிடந்த கரம்பா ஏரியை தி.மு.க-வினர் சுத்தம் செய்தனர். ஸ்டாலின் நடந்து செல்வதற்கு வசதியாக மண் வெட்டியைக் கொண்டு பாதை அமைத்தனர். பின்னர் வந்த ஸ்டாலின் ஏரிக்குள் இறங்கி நடந்தபடியே பார்வையிட்டார். அப்போது விவசாயி ஒருவர், ``கடந்த பல வருடங்களாகவே இந்த ஏரி மட்டும் இல்லை. இதைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடக்கிறது. விவசாயம் இல்லாததால் ஏரி மட்டும் இல்லை, எங்க வாழ்கையும் வறண்டு கிடக்கிறது. கல்லணைக்கு அருகில் உள்ள எங்களுக்கே இந்த நிலைமை என்றால் கடைக்கோடி கடைமடைப் பகுதி விவசாயிகளின் நிலையை  எண்ணிப்பாருங்கள்'' என்றார்.

Sponsored


தானாக வந்த தண்ணீரைக் கூட அரசு முறையான  நடவடிக்கை எடுத்து ஏரி குளங்களில் நிரப்பாமல் விட்டது வேதனையின் உச்சம். தஞ்சையின் மையப் பகுதியிலேயே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதுபோன்ற அரசின் மெத்தனத்தால் கோடைக்காலத்தின் பெரிய பாதிப்பு ஏற்படும் விவசாயிகளின் வாழ்கையை மலர வைக்க நீங்கதான் நடவடிக்கை எடுக்கணும் என நா தழு தழுக்க கூறினார்.

பின்னர், ஸ்டாலின் கிளம்பிச் சென்ற வழியில் வினோத் என்பவர் லாரி உரசி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு வலது கை உடைந்து காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த ஸ்டாலின் உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி  இறங்கி அவரது அருகே சென்று நலம் விசாரித்தார். அதற்குள் 108 ஆம்புலன்ஸ் வந்துவிட அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஏற்றிவிட்ட பின்னர் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.Trending Articles

Sponsored