``கடைமடைக்கு தண்ணீர் வராததுக்கு மத்திய, மாநில அரசுகளின் சதியே காரணம்" -ஜி.கே.மணி சாடல்!"விவசாயம் இல்லாமல் வயல்களை எல்லாம் தரிசு நிலங்களாக மாற்றுவதற்காகவே கடைமடை வரை தண்ணீர் விடாமல் இருக்கிறார்கள்" என பாமகவின் ஜி.கே.மணி  தெரிவித்தார்.

Sponsored


தஞ்சாவூரில், கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லவதற்கு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து, பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அதன் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பேசினார். அவர், ”கர்நாடகா மற்றும் கேரளாவில்  பெய்த கனமழையால் மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர்  மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர்  திறந்துவிடப்பட்டது. மேலும் நீர் வரத்து அதிகமாக இருந்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு 170 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது. ஆனால், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்டத்தில் வாய்க்கால்களில் தண்ணீர் வராமல் குளங்கள் காய்ந்துகிடக்கின்றன. வயல்கள் வறண்டுகிடக்கின்றன. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்பட்ட தஞ்சைத் தரணியில் முப்போக விளைச்சல் கண்ட வயல்கள் எல்லாம்  இன்று ஒரு போகத்திற்கே வழியில்லாமல் வறண்டுகிடக்கும் அவல நிலையில் இருக்கிறது.

Sponsored


மழைபெய்யும் காலங்களில் பாசனத்துக்கும், குடி நீருக்கும் தேவையான தண்ணீரை தமிழக அரசு தேக்கிவைக்கத் தவறிவிட்டது. நீர் மேலாண்மைத் திட்டங்களை நிறைவேற்றவில்லை. அதனால்தான், மேட்டூரில் இருந்து தண்ணீர் குழாய் போட்டுக் கொண்டுபோன மாதிரி ஆற்றிலிருந்து வீணாகக் கடலுக்குச் சென்றுவிட்டது. ஆனால், காவிரிக் கரையோரங்களில் இருக்கும் வாய்கால்கள், குளங்கள் வறண்டு கிடக்குது இதற்குக் காரணமான தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், வடகிழக்குப் பருவமழை கடுமையாகப் பெய்யப் போகிறது. இனியும் அரசு காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் வாய்கால்களைத் தூர் வார வேண்டும்.

Sponsored


டெல்டா பகுதியில் மத்திய, மாநில அரசுகள் சில மோசடி மற்றும் சதிச் செயல்களைச் செய்துவருகிறது. விவசாயம் இல்லாமல் வயல்களை எல்லாம் தரிசு நிலங்களாக மாற்றுவதற்காகவே கடைமடை வரை தண்ணீர் விடாமல் இருக்கிறார்கள். ஏன் என்றால், வயல்கள் வறண்டு கிடந்தால்தான் டெல்டாவை பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாகவும், மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஹைட்ரோ கார்பன்  போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியும். டெல்டா மாவட்டங்களை வீணடிக்கிற, சீரழிக்கிற இதுபோன்ற செயல்களைச்செய்கிறது. விவசாயம் உற்பத்திசெய்யவில்லை என்றால் உண்ண உணவு கிடைக்காது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் விவசாயத் திட்டங்கள் அதிகமாக நிறைவேற்றப்பட்டு, விவசாயம்  செய்யும் நிலங்களின் பரப்பளவும் அதிமாகியிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. மத்திய அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டாதகத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசு விவசாயிகளிடம் ஒரு மூட்டை நெல்லைக்கூட விடாமல் கொள்முதல் செய்ய வேண்டும்" என்றார்.Trending Articles

Sponsored