பொதுச் செயலாளர் தேர்வு!- ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்பு நோக்கும் செப்டம்பர் 13-ம் தேதி!Sponsored``அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தேர்வு நடத்த வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் வரும் 13.9.2018 அன்று தீர்ப்பு வர உள்ளது. இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க தலைமைக்கு அடுத்தச் சிக்கலை ஏற்படுத்த உள்ளது. 
`அ.தி.மு.க-வின் விதிகளை மாற்றக்கூடாது; பொதுச் செயலாளர் பதவிக்கானத் தேர்தலை நடத்த வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்க வேண்டும்' என்று தீர்ப்பு அளித்திருந்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க தலைமை  டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை நீங்கள் நாடாமல் எதற்காக மேல்முறையீட்டுக்கு வந்தீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 'அன்றைய தினமே வழக்கின் தீர்ப்பும் அளிக்கப்படலாம்' எனத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குச் சென்றால் பொதுச் செயலாளர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் வாய்ப்பும் உள்ளது. இதனால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தரப்பு கடும் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored