நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.கவினர் செய்த விளம்பரம்Sponsoredதுறையூர் முருங்கப்பட்டி வெடி விபத்தில் உயிரிழந்த 19 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா மூன்றரை லட்சம் ரூபாயும்,  படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பிக்கள் மருதைராஜா, ரத்தினவேல், எம்.எல்.ஏக்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் துறையூர் முருங்கப்பட்டி வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள்.

Sponsored


இறந்த 19 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்த 4 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்கள் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

Sponsored


ஆனால் இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் துறையூர் தாசில்தார் அலுவலக சுவற்றில் முதல்வர் படம் இருந்தாலும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 'உதவி கொடுக்கும் இடத்திலும் அம்மா படம் இருக்கணும்' என சொல்ல, அமைச்சர்களுக்கு முன்னும் பின்னும் முதல்வர் ஜெயலலிதா படத்தை வைத்தபிறகே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

- சி.ய.ஆனந்தகுமார்

படம்: என்.ஜி.மணிகண்டன்Trending Articles

Sponsored