அப்போலோவில் அதிமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டம் தொடங்கியது!முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. முன்னதாக முதல்வரின் பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முதல்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Sponsored


இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. அப்போலோ மருத்துவமனையின் மெயின் பிளாக் தரைத்தளத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. இரண்டாவது தளத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அங்கு நடப்பவற்றை கவனித்து வருகிறாராம். சிறிது நேரத்தில் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored