முதல்வரை தேர்வு செய்த கூட்டத்தில் பங்கேற்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ. !Sponsoredகடலூர் : அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்காக கூட்டப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் மட்டும் பங்கேற்கவில்லை. இது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 5ம் தேதி இருமுறை கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றனர் என சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Sponsored


அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பது தொடர்பாக விளக்கம் கேட்க அவரை தொடர்பு கொண்டோம். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. "அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சென்னையிலேயே தங்கியிருக்கிறார்" என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sponsored


இது தொடர்பாக விசாரித்த போது, "எம்.எல்.ஏ. முருகுமாறனுக்கு உடல்நலம் சரியில்லை என்பது பொய். அவர் சில தினங்களாக இந்தியாவிலேயே இல்லை. கட்சி தலைமைக்கு தெரியாமல் அவர் வெளிநாடு சென்றிருந்தார். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற போயிருக்கலாம் என்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தால் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி, எதிர்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடும் என அ.தி.மு.க.வில் அச்சம் நிலவி வரும் நிலையில், அதில் இவரும் ஒருவராக இருக்க கூடும் என பேசப்பட பரபரத்தது அ.தி.மு.க. வட்டாரம்.

எம்.எல்.ஏ. முருகுமாறன் பங்கேற்காதது குறித்து பல காரணங்கள் சொல்லப்பட, இது தொடர்பாக அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயளாளர் அருண்மொழிதேவனிடம் பேசினோம், "பணம் மாற்ற சென்றார், எதிர்கட்சிகளுக்கு விலைபோய் விட்டார் என்பதெல்லாம் சுத்த பொய். தனக்கு வேண்டாதவர்கள் யாரோ கிளப்பிவிடும் புரளி. அவர் அம்மாவின் உண்மையான விசுவாசி. அவரது நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்று பார்க்க சென்றார். வருவதுக்கு கொஞ்சம் தாமதமானதால் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை. மற்றபடி அம்மாவின் இறுதி சடங்கில் எல்லாம் கூடவே இருந்து பார்த்துக்கொண்டார்," என்றார்.

- க.பூபாலன்Trending Articles

Sponsored