“என் அம்மா: எனக்கு எவ்வளவு முக்கியமானவர்!” - ஜெயலலிதா எழுதிய கட்டுரைSponsoredஜெயலலிதா அரசியலில் காலடி வைத்த புதிதில் டெல்லியில் தனக்கு நெருங்கிய தோழியாக இருந்தவர் பத்திரிக்கையாளர் வாசந்தி. இவர் கடந்த 2011-ம் ஆண்டுக் காலகட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். ஜெயலைதாவின் பால்ய காலத்தில் இருந்து தொடங்கும் இந்த நூலில் அவரது வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களாக ஜெயலலிதாவே குறிப்பிட்ட விஷயங்களை இதில் எழுதியிருந்தார். இந்த நூலை வெளியிட கூடாது என்று ஜெயலலிதா தடை வாங்கினார். பெங்குவின் நிறுவனம் வெளியிடக்கூடாது என்று வாங்கிய 5 ஆண்டுகள் தடை கடந்த நிலையில் கடந்த மே மாதம் ஈ-புத்தகமாக இந்த வாழ்க்கை வரலாறு வெளியானது. அதிலிருந்து சில குறிப்புகள்.. 

"மாலை மங்கும் இருட்டு வேளையில் தனது தந்தையைப் பிணமாகத் தூக்கி வந்த காட்சியை அம்மு மறக்கவேயில்லை. அப்போது அவருக்கு 2 வயதுதான். இருந்தாலும் அவர் அந்தக் காட்சியை அப்படியே விவரிக்கும் அளவிற்கு நினைவில் வைத்திருந்தார். அதன் பின்னரே அவரின் ஒவ்வொரு நாளும் மாற்றத்துடன் தான் இருந்தது." 

Sponsored


"கணவன் இறந்ததும் வேதா (சந்தியா) தனது இரண்டு பிள்ளைகளுடன் தனது தந்தை ரங்கசாமி அய்யங்கார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ரங்கசாமி அப்போதே பாரத் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேதா, அம்புஜா, பத்மா ஆகிய மூன்று மகள்கள் மற்றும் சினிவாசன் என்ற மகன் என நான்கு பிள்ளைகள் ரங்கசாமி அய்யங்கார்-கமலாம்மா தம்பதியருக்கு" .

Sponsored


"தன் தங்கை பத்மாவின் பொறுப்பில் அம்முவையும் மகன் பப்புவையும் பெங்களூரிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு நடிக்கப் போய்விட்டார் சந்தியா. பிஷப் காட்டன் ஸ்கூலில் கல்வியைத் தொடங்கிய ஜெயலலிதா ஒவ்வொரு வார விடுமுறையிலும் அம்மாவின் வருகைக்காக ஏக்கத்துடன் காத்திருப்பாராம். அப்படி வரும் சந்தியா மீண்டும் ஊருக்கு கிளம்பும் போது ஜெயலலிதா அழுவார் என்று அவருக்குப் புத்தகங்களைப் படிக்கத் தருவாராம். அப்படித் தொடங்கியது ஜெயலலிதாவின் வாசிப்புப் பழக்கம்". 

"சித்தி பத்மாவிற்குத் திருமணம் ஆகியதும் வேறு வழியின்றிச் சந்தியா பிள்ளைகளைச் சென்னைக்கு அழைத்து வரவேண்டியிருந்தது. சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா சிலநாட்களிலேயே ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையானார். பள்ளியில் கிடைத்த உற்சாகம் வீட்டில் அம்முவுக்குக் கிடைக்கவேயில்லை. படிப்பில் வாங்கும் மதிப்பெண்களைப் பாராட்டக்கூட அவரது அம்மாவால் அப்போது முடியவில்லை. சினிமா சினிமா எனப் பறந்து கொண்டிருந்த சந்தியாவை ஜெயலலிதா சந்திப்பதே அரிதாக இருந்தது. அன்றைய அம்முவிற்கு மகிழ்ச்சியளித்த ஒரே விஷயம் பள்ளி மட்டுமே என்பதாக இருந்தது." 

"என் அம்மா: எனக்கு எவ்வளவு முக்கியமானவர்" என்கிற கட்டுரையை எழுதியதற்காக ஜெயலலிதாவுக்குப் பரிசு கிடைத்தது. அந்தக் கட்டுரையை அவரின் ஆசிரியர் பள்ளியின் ப்ரேயரில் படித்துக் காட்டி பாரட்டினார். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வீட்டுக்கு வந்த அம்முவுக்குச் சந்தியா இல்லாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. இரண்டு நாட்களாக வராத சந்தியாவிற்காகக் காத்திருந்த அம்மு அப்படியே அந்தக் கட்டுரை எழுதிய நோட்டை கட்டிப்பிடித்தபடி சோபாவில் தூங்கிவிட்டார். இரவில் வீட்டுக்கு வந்த சந்தியா அந்த நோட்டை எடுக்கப்போகப் படாரென விழித்த அம்மு அப்படி ஒரு அழுகை அழுதிருக்கிறார். இது அவரின் மனதில் அழியாத சோகமாய் பதிந்த ஒன்றாக மாறிவிட்டது" 

"தினமும் அம்மா லேட்டாக வீட்டுக்கு வருவதும். அவரைத்தேடி வீட்டுக்கு வரும் சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களும் அம்முவிற்குச் சினிமாவின் மேலேயே வெறுப்பை வரவழைத்தது. பள்ளி படித்து முடித்தபின் வழக்கறிஞராகவோ, டாக்டராகவோதான் ஆகவேண்டும் என்கிற ஆசையில் இருந்தார். வாய்ப்பிருந்தால் ஐ.ஏ.எஸ் எழுதி இந்திய ஆட்சித்துறைப்பணிக்குப் போகவேண்டும் என்றும் எண்ணினார். கனவிலும் சினிமாவை நினைக்கவில்லை" .

இவை எல்லாவற்றையும் விட ஜெயலலிதாவின் மனதில் அழியாத கறையாகவும், எதையுமே மறைக்காத தன் தாயிடம் கூட இறுதிவரை மறைத்த ஒரு செய்தி உண்டு. அது அம்மு தன் வாழ்வில் சந்தித்த முதல் நம்பிக்கை துரோகம். அவமானத்தால் கூசிக்குறுகி நின்ற அந்தக் கணம் தன்னால் எப்போதுமே மறக்க முடியாது என்று கூறுகிறார் ஜெயலலிதா. இதோ அவரின் வார்த்தைகளிலேயே.. 

"அப்போது தியாகராய நகர் சிவஞானம் தெருவில் குடியிருந்தோம். 13 வயது எனக்கு, விளையாட்டும், துடுக்குத்தனமுமாக இருந்த என்னை வீட்டுக்குள்ளேயே அம்மா இருக்கச் சொன்ன காலகட்டம். என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் நான் படித்த சர்ச் பார்க்கில் படிக்கும் என் சீனியர் வீடும் இருந்தது. மாலை வேளைகளில் மாடியில் இருந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பேன். அப்போது ஒரு ஜெயின் பையன் அந்த அக்காவை நோக்கி எதோ சைகை செய்வான். பதிலுக்கு அவரும் கையை ஆட்டுவார் . அப்படியே பேசிக்கொள்வார்கள். எனக்கு விவரம் புரியாத வயசு என்றாலும் இவர்களின் உறவு ஓரளவுக்குப் புரிய தொடங்கியது. அந்தப் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டபோது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், இதற்கு நான் உதவவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். கொஞ்சம் த்ரிலிங்காக இருந்ந்தாலும் அந்தப் பெண் மிகவும் வேண்டிக்கொண்டதால் சம்மதித்தேன்.

அந்தப் பையன் தெரு முனையில் வந்தால் தன்னிடம் சொல்ல வேண்டும் என்றும் தான் சொல்வதை அவரிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒரு நாள் அந்தப்பெண் வரவில்லை இதை அந்தப் பையனிடம் என வீட்டு மாடியிலிருந்து சொல்லிக்கொண்டிருந்ததை  பால்காரர் பார்த்துவிட்டார். அந்தப் பெண் வீட்டிலும் இதைச் சொல்லிவிட்டார். அதன் பின் அந்தப் பெண் ஜன்னல் பக்கமே வரவில்லை. இந்த விவரம் தெரியாமல் அந்தப் பெண்ணைத் தேடி அவரின் வீட்டுக்கு நான் போனேன். அவரின் வீட்டார் அனைவரும் என்னை அவமானமாகத் திட்டினார்கள். காரணம் அந்தப் பெண் நான்தான் அந்த ஜெயின் பையனை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தேன் என்று தான் தப்பிபதற்காகச் சொல்லியிருந்திர்ருக்கிறார். என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் துரோகம் அது. என்றுமே மறக்கமுடியாத அவமானம் அது." 

                       -வரவனை செந்தில் Trending Articles

Sponsored