'சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது' - எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிக்கு அடி உதை.Sponsoredதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலமையில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு .10.45 க்கு துவங்கியது. இதில் அமைச்சர்கள், ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய உதயகுமார், ''அதிமுகவின் பொதுச் செயலாளராக 'சின்னம்மா சசிகலாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருந்து செயலாற்ற வேண்டும்'' என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகி ஒருவர், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவை மட்டுமே அம்மாவாக ஏற்றுக்கொள்ளப்படும். மற்றவர்களை அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆட்கள் அவரை சரமாரிய அடித்து உதைத்து கூட்டத்தை விட்டு வெளியேற்றினர். மேலும், சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாத அதிமுகவினர், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மூலம் ஆரணியில் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களை கிழித்து எறிந்தனர்.

Sponsored


-  கா.முரளி.

Sponsored
Trending Articles

Sponsored