99 சதவீத நேர்மையான மக்கள் மீதே, மத்திய அரசு தாக்குதல் - ராகுல் காந்தி காட்டம்.நரேந்திர மோடி தலையிலான பி.ஜே.பி அரசு, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் ஒன்றாக, கடந்த மாதம் 8-ந்தேதி, புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே வந்தன. காங்கிரஸ் தரப்பில் நோக்கம் நல்லதுதான் ஆனால் நடைமுறைப் படுத்திய விதம் ஏற்கத்தக்கது அல்ல என்று சொல்லப்பட்டது.

Sponsored


மத்திய அரசின் மீதும் நரேந்திரமோடி மீதும் கடும் விமர்சனங்கள் காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்டு வருகிறது. பண மதிப்பு நீக்க விஷயத்தில் மன்மோகன் சிங் மத்திய அரசின் மீது வைத்த விமர்சனம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Sponsored


இன்று காலை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயப் பிரச்னைகள் அதிகரித்துவிட்டன. அதனால் வேளாண் கடன்களை ரத்து செய்வேண்டும் எனும் கோரிக்கையை  முன்வைத்தார்.  
பின்னர் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த பண மதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்படுவது 99 சதவிகிதம் பேர் நேர்மையான இந்தியக் குடிமக்களே. அவர்கள் மீது தீக் குண்டுகளை வீசுவதுபோன்ற நடவடிக்கையாகவே இதைப் பார்க்க முடியும் என்றும், கறுப்பு பணம் எல்லாம் ரூபாய் நோட்டாக இருப்பது இல்லை, அது வேறு வேறு வடிவங்களிலேயே இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

Sponsored
Trending Articles

Sponsored