ராகுல் காந்தி கூறுவது தேசத்துரோகம் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  "இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கண்டிப்பாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ப'ழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது மோடிக்கு சாதகமானது' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவது தேசத் துரோகம். ரூ 10 ஆயிரம் கோடி முதலீட்டில் கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழி சாலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Sponsored


அதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதற்கென இருக்கும் குழு, இது குறித்து பரிசீலித்து முடிவு செய்யும். தமிழக முதல்வர் கோரிக்கைக்கு நியாயம் கிடைக்கும். புயல் சேதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு, நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். சாலை விபத்துககளில் 80 சதவீதம்,  வாகன ஓட்டிகளால்தான் ஏற்படுகின்றது. அதிலும் மது குடித்து விட்டு ஓட்டுபவர்களால்தான் விபத்து ஏற்படுகின்றது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

Sponsored


-முருகன்

Sponsored
Trending Articles

Sponsored