’இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ - திருமாவளவன்அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்துள்ளார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக, திருமாவளவன் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Sponsored


இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 'விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் கட்சி. ஜெயலலிதாவுக்கு பிறகு துணிச்சலாக அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு இதை அரசியலுடன் இணைத்து பார்க்க வேண்டாம்' என்றார். திருமாவளவன் மேலும் பேசுகையில், 'பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். மக்கள் நலக்கூட்டணியில் வி.சி.க. மற்றும இடது சாரிகள் தொடர்கின்றன' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored