சசிகலா தோற்றத்தில் ஜெயலலிதாவின் அடையாளங்கள்!



ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த சசிகலா, இன்று அதிமுக-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். எந்த நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவுக்கு துணையாக சசிகலா இருப்பார். ஒவ்வொரு தலைவருக்கும் சில அடையாளங்கள் இருக்கும். அதுபோல, ஜெயலலிதா என்றவுடனே, நேர்த்தியான உடை, தெளிவான குரல் உள்ளிட்ட சில அடையாளங்களாக மக்கள் மத்தியில் உள்ளன. இன்று ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் சசிகலாவின் தோற்றத்தில் சில மாற்றங்களைக் காணமுடிகிறது.

Sponsored


* 'அடிக்கும் கலர்' என கிராமத்தில் சொல்லப்படும் டார்க் கலர்களை நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் நாகரிகம் என விரும்புவதில்லை. பூபோட்ட சேலைகளே  கிராமத்துப் பெண்களை அதிகம் கவரும். நார்மலான கலர்கள்,  பார்ப்பவர்களிடம்  தனி மரியாதையைக் கூட்டும். இதேபோல புது ஸ்டைல் என வருவதை உடனே ஏற்று, அதற்கு ஏற்றார்ப்போல மாறிக்கொள்ளவும் மாட்டார்கள். பாரம்பர்ய வழக்கம் என்பதும் கூடுதல் தகுதி. இத்தகைய வழக்கத்தையே சசிகலாவும் இதுவரை பின்பற்றி வந்தார். ஆனால் இன்று ஜெயலலிதாவைப்போல புடவையும் ஸ்டைலையும் மாற்றிவிட்டார்.

Sponsored


ஜெயலலிதாவின் அடையாளங்கள்:
*நெற்றிப் பொட்டுக்கு மேல் செந்தூரக் கோடு,  ஜெயலலிதாவின் முக அழகை உயர்த்திக் காட்டியது.
*பார்டர் வைத்த  பச்சை நிறச் சேலை, அனைவரும் விரும்பும்  நிறம்.
*இடது கையில் கறுப்புப் பட்டையில் வாட்ச் , செயலில் உறுதித்தன்மை .
*முடிபோட்ட கூந்தல், அம்மாவின்  எளிய  அலங்காரம் இவையெல்லாம் முன்னாள் முதவர் ஜெயலலிதாவின் அடையாளங்களாக இருந்தவை.

Sponsored


சசிகலாவின் மாற்றங்கள்:
லைட் கலர் பூ போட்ட சேலையும் அதற்கு மேட்சாக சாதாரண ப்ளவுஸும், வட்டப்பொட்டும், ஜடை போட்ட கூந்தலும், வளையல்களுடன் ஒற்றை மூக்குத்தி, என இது நாள்வரை அணிந்து வந்த சசிகலா,    'அக்காவைப் போலவே நானும் மாறிவிட்டேன்' என்பதைச் சொவதைப் போல  தன் அடையாளங்களை மாற்றிவிட்டார்.

*காலர் வைத்த ப்ளவுஸும், ஜெயலலிதா பேசுவதைப் போலவே வார்த்தைகளைச் சுருக்கமாகவும் ஜெயலலிதா  உச்சரிப்பைப் போலவும்  பேசி, சாதாரண மக்களை மட்டுமல்லாமல், அனைவரையுமே ஆச்சர்யப்படவைத்துவிட்டார்.
''நம் அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை; ஆனால் நமக்கோ அம்மாதான் வாழ்க்கை.'' என்றது ஜெயலலிதாவை நினைவூட்டியது.
''மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில்  நாம் பயணம் மேற்கொள்வோம்.''  என்றவரின் வார்த்தைகள் நாளை, ''மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாறலாம். மாறினால், வயது வித்தியாசம் இல்லாமல் 'அம்மா" என்று உண்மை அன்போடு அழைத்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நேர்மையான ஆட்சி அமைவதற்காகச்  சசிகலா மாற்றங்கள் செய்வார் என்றால்  மக்கள் வரவேற்பார்கள்.


-கே.ஆர்.ராஜமாணிக்கம்



Trending Articles

Sponsored