#LIVE - தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு



Sponsored



இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் விதி 18ல் மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.கவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தரப்பட்டது. செயல் தலைவரான ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். துரைமுருகனின் உரையைக் கேட்ட ஸ்டாலினும் கண்ணீர் விட்டார்.

'தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.  சூழல்தான் என்னை செயல்தலைவராக ஆக்கியுள்ளது' என ஸ்டாலின் உரையாற்றினார்.  மேலும் அவர் பேசுகையில், 'எல்லா பொறுப்புகளுக்கு விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்டேன். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் தலைவர் உடல்நலம் குன்றி இருக்கும் பொழுது இந்த பதவியை ஏற்றுக் கொள்வதில் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த பொறுப்பினை சிறப்பாக ஏற்று செயல்படுவேன்.

Sponsored


Sponsored




பள்ளிப் பருவத்தில் இருந்தே திமுகவில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. செயல் தலைவர் என்பதை பதவியாக கருதவில்லை, பொறுப்பாக கருதுகிறேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்தப் பொதுக்குழுவால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நந்தனம், தேனாம்பேட்டையில் கடும் வாகன நெரிசல்.

படங்கள்: பா.காளிமுத்து



Trending Articles

Sponsored