நாலு பேரும் தி.மு.க. பொதுக்குழுவும்!Sponsoredதி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவருக்கான அத்தனை அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்குத் தரப்பட்டுள்ளது. நாட்டுல என்ன நடந்தாலும் சோசியல் மீடியாவுல கம்பு சுத்துறதுதானே உலக வழக்கம். இதைப்பற்றியும் இந்நேரத்துக்கு நாலுபேர் நாலுவிதமா பேச ஆரம்பிச்சிருக்கணும்ல, அதான் இது!.

'பரிதி' கதிரவன் :

Sponsored


தி.மு.க. செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வானதிற்கு முதலில் வாழ்த்துகள். மற்ற கட்சிகளில் உள்ளதுபோல் ஸ்டாலின் இந்தப் பதவியை ஒரேநாளில் அடைந்துவிடவில்லை. கடைநிலைத் தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, படிப்படியாகத் தன்னை அரசியலில் உயர்த்தியிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருக்கும் இந்நேரத்தில், கட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள ஸ்டாலின்தான் சரியான தேர்வு. இனி சசிகலா Vs ஸ்டாலின் என்ற போட்டிதான் சரியாக இருக்கும்.

Sponsored


'தாமரை'ப்பாண்டி : 

இவ்வளவு நாளா கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல்தானே இருந்தாரு. அப்போவெல்லாம் இல்லாம இப்போ செயல் தலைவராக ஸ்டாலினை நியமனம் செய்திருக்கிறதுக்குக் காரணம், கருணாநிதி இப்போ செயல்படாத தலைவராக இருக்கிறதை உணர்ந்தனாலேயா அல்லது சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக ஆனதால் அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா என்கிற மனப்பான்மையினாலா? 

அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கின ஐந்து வருடத்திற்குள் பொதுச் செயலாளர் ஆக முடியாதுன்னு சொன்னாங்க. விதிகளையெல்லாம் தளர்த்தி பொதுச் செயலாளர் ஆகிட்டாங்க. இப்போ தி.மு.க-விலேயும் விதி 18 -ல் திருத்தம் செஞ்சுட்டு ஸ்டாலினை செயல் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்காங்க. தமிழகத்தில் இப்போதெல்லாம் என்ன நடக்குதுன்னே மக்களால் யூகிக்க முடியலை. கட்சிகளுக்குள்ளேயே இவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது மக்களின் பிரச்னைகளை இந்தத் திராவிடக் கட்சிகள் எப்படித் தீர்க்கும்? செயல்படும் தலைவர் என்றால் பிரதமர் மோடியைப் போல எந்த முடிவுகளையும் திட்டவட்டமாக எடுப்பவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை!

ஆன்லைன் அரவிந்த்சாமி :

அப்படி இப்படி எப்படி அப்படின்னு கடைசியா எப்படியோ தி.மு.க-வோட பொதுக்குழுவைக் கூட்டிட்டாங்க. கோலி இல்லாத டெஸ்ட் மேட்ச் கணக்கா முதல் தடவையா கலைஞர் இல்லாமலே பொதுக்குழுவைக் கூட்டி இருக்காங்களாம். ஸ்டாலின் கண்ணீரோட பதவி ஏற்றதுதான் இந்தக் கூட்டத்துல முக்கியமான கட்டம். தலைவர் தெரியும், துணைத்தலைவர் தெரியும் அதென்ன பாஸ் செயல் தலைவர்னு கேட்டா பெருசா வித்தியாசம்லாம் எதுவும் இல்லைனு சொல்றாங்க.

தலைவருக்கும், செயல் தலைவருக்கும் இடையில ஒரு மெல்லிசான கோடுதான் இருக்கு `எல்லா அதிகாரமும் கையில் இருந்தா அவர் தலைவர், அதிகாரம் எல்லாமும் கையில் இருந்தா அவர் செயல் தலைவர்`,  எதுனா புரியுதா..?. அதான் ப்ரோ தி.மு.க. ஆனாலும் சின்ன வயசுல இருந்து தி.மு.க-வுக்காக உழைச்சு இப்போ செயல் தலைவர் ஆகியிருக்கும் ஸ்டாலினுக்கு எத்தனை லைக்ஸ் கொடுப்பீங்க ஃப்ரெண்ட்ஸ். என்னதான் இருந்தாலும் ஸ்டாலின் ப்ரோ நீங்க தலைவர் ஆகுங்க, செயல் தலைவர் ஆகுங்க, தேனாம்பேட்டைல எங்களுக்கு டிராஃபிக்கை கிளியர் பண்ணிவிடுங்க, ஆங்.

நடுசென்டர் நாகராஜன் :

ஸ்டாலினைத் தி.மு.க-வின் செயல்தலைவராக அறிவிச்சுருக்காங்களாம். இருக்கிற பெரிய போஸ்டிங்க்ல எதையுமே கொடுக்கக் கூடாதுனு புதுசா ஒரு பெரிய போஸ்டிங் ஒன்னை உருவாக்கி அதைக் கொடுக்கிற நூதனமான ட்ரிக்லாம் தி.மு.க-வுக்கு மட்டுதான் வரும். ஆமா அது என்ன 'செயல் தலைவர்'? ஆல்ரெடி ஸ்டாலின் அந்த வேலையைத்தானே ஊர் ஊரா சுற்றி செஞ்சிக்கிட்டு இருந்தாரு.. இல்லையா?Trending Articles

Sponsored