பா.ஜ.க.வில் இணைகிறார் என்.டி.திவாரிSponsoredஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் என்.டி திவாரியும், அவருடைய மகன் ரோஹித் சேகரும் இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளனர். என்.டி.திவாரி உ.பி மாநில முதல்வராகவும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தவர். தன் மகன் ரோஹித்துக்கு சீட் தர பா.ஜ.க ஒப்புக்கொண்டதால் கட்சி மாறுகிறார் என்று சொல்லப்படுகிறது. 

2013-ம் ஆண்டு இதே ரோஹித் சேகர், தன் ரத்த உறவிலான  தந்தை என்.டி.திவாரிதான் என வழக்கு தொடுத்தார். முதலில் என்.டி.திவாரி இதை மறுத்தார். டி.என்.ஏ சோதனைக்கும் தொடர்ந்து மறுத்து வந்தார் திவாரி. பின்னர் டி.என்.ஏ சோதனைக்கு ஒப்புக்கொள்ள, முடிவில் ரோஹித் சேகர், என்.டி. திவாரியின் மகன்தான் என நிரூபணமானது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored