'ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை மிரட்டிப் பணிய வைத்த பி.ஜே.பி.!' - திருமாவளவன்Sponsoredதிருச்சி : ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தனது பாரத்தை மாநில அரசின் மீது ஏற்றிவிட்டிருக்கிறது.மத்திய அரசு மிரட்டியும், நிர்பந்தித்துமே மாநில அரசை பணிய வைத்துள்ளது," என திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
குடியரசு தினத்துக்கான ஒத்திகை நடத்த, மெரினா கடற்கரைச் சாலை தேவை என்பதற்காகவே, திட்டமிட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டத்தை கலைத்துள்ளது காவல்துறை. முதலில் மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை துவங்கியபோது, அரசு அவர்களை அனுமதித்து விட்டு, அரசு விரும்பாத போது விரட்டி அடித்து உள்ளது. மீண்டும் மாணவர்கள் எந்த காரணத்துக்காகவும் ஒன்று சேரக்கூடாது என்பதற்காகாவே இந்த அடக்குமுறை தாக்குதல் திட்டமிட்டு நடந்துள்ளது.

Sponsored


இந்த வன்முறைச் சம்பவத்திற்கு உரிய முறையில் நீதி விசாரணை நடத்தக் கோரி மக்கள் கூட்டியக்கம் சார்பில் வரும் 28-ம் தேதி சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாணவர் போராட்டத்திற்கு பிறகு சென்னையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும்.

Sponsored


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தனது பாரத்தை மாநில அரசின் மீது ஏற்றிவிட்டிருக்கிறது.மத்திய அரசு மிரட்டியே, மாநில அரசை நிர்ப்பந்திக்க வைத்துள்ளது. பி.ஜே.பி.யைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக தமிழர்களைக் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். பொறுக்கி என்றெல்லாம் கூறிவருகிறார். இது சரியானது அல்ல.

மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை நடந்ததற்கு தி.மு.க. தூண்டுதல் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவருக்கு தி.மு.க. மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் அப்படி கூறலாம். நாங்கள் அப்படி நினைக்கவில்லை.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தற்போது சுதந்திரமாக செயல்பட துவங்கியிருக்கிறார். ஏற்கனவே வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய ஆய்வுக்குழு, அதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை புயலுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் வறட்சி பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் குழு, அவசரகதியில் ஆய்வு மேற்கொள்ளக்கூடாது. இன்னும் கூடுதலான நாட்களை ஒதுக்கி ஆய்வு நடத்திட வேண்டும்.

சமத்துவ ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் வைத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது. அதையே நானும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

- சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள் : என்.ஜி.மணிகண்டன்Trending Articles

Sponsored