பன்னீர்செல்வமும் ஸ்டாலினும் ஒன்றாக உறுதிமொழி ஏற்றார்கள்..ஏன் தெரியுமா?Sponsoredட்டசபை என்றாலே தொடர் சலசலப்புகளும், எதிர்கட்சிகளின் தொடர் வெளிநடப்புகளும் என்கிற பிம்பம் தமிழக அரசியலில் உருவாகிவிட்ட சூழலில், காந்தி நினைவுதினமான நேற்று அந்த பிம்பத்தை தகர்த்தெறியும் வகையிலான சம்பவம் நிகழ்ந்தேறி இருக்கிறது.

சுதந்திரத்துக்கும், சம உரிமைக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும், மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான அவசியத்தையும் தன் இறுதிவரை வலியுறுத்திவந்த மகாத்மா காந்தியின் 69வது நினைவு தினம் நாடெங்கிலும் தீண்டாமை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று காலை முதல், முதலமைச்சர் பன்னீர்செல்வமும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் அதன்பிறகான பிரச்னைகள் தொடர்பாக காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தீண்டாமை ஒழிப்புதின உறுதிமொழியை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கும் வகையில் பேரவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக  பேரவைத் தலைவர் அறிவித்தார். இதையடுத்து இராணுவ வீரர்கள் மைதானத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது. யாரும் எதிர்பாராதவிதமாய் அதில் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Sponsored


Sponsored


தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகள் ஆளுமைக்கு வந்த பிறகு எந்த ஆளும்கட்சியின் எதிர்கட்சியும் ஒன்றாக இணைந்து உறுதிமொழி ஏற்றதாக வரலாறுகள் இல்லை. உறுதிமொழி ஏற்பு என்னும் நிலையில் அது ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான நிகழ்வாக மட்டுமே இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளது ஆளும் மற்றும் எதிர்தரப்புகளிடையேயான புரிந்துணர்வு நிலையை இன்னும் வலுப்படுத்தும் நிலையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஜெயலலிதாவின் மறைவையொட்டி அதன்பிறகு நடந்த தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் அவருக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதும் கவனத்தில் கொள்ளவேண்டியது.

1930 முதல் தனது ஒத்துழையாமை இயக்கம் வழியாகத் தொடர் அறவழிப் போராட்டங்களை நடத்தி வந்த காந்தி 1932 செப் 16ல் மும்பை எரவாடா சிறையில்  பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார். மக்களின் வாக்காளர் பட்டியலை சாதிவாரியாகப் பிரிக்கும் பணியில் அந்த அரசு அப்போது முனைப்புடன் இருந்தது. அடுத்து வரும் பல காலங்களுக்கு இந்த பிரிவினை பிரச்னையை ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சினார். அதன்படியே சுதந்திரம் கிடைத்து பல காலங்களுக்குப் பிறகும்  தீண்டாமை ஒரு பெரும் நோயாகவே தொடர்ந்து வருகிறது. காந்தி வகுப்புவாதத்துக்கு எதிராக தனது போக்கில் தொடர்ந்து குரல்கொடுத்தவர் என்பதற்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்னும் ஒரு சாட்சியமாய் எஞ்சியிருக்கிறது. காந்தியின் மறைந்த தினம் அதன் காரணமாகவே தீண்டாமை ஒழிப்பு தினமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் தீண்டாமைக்கு எதிராக ஆதி முதல் பெரும் குரல் கொடுத்து எழுந்த நீதிக் கட்சி தொடங்கி அதையடுத்து வந்த திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகள் வரை சாதியவாதத்துக்கு எதிரான நிலைபாட்டையே எடுத்துவந்தாலும் அதன்மீதான உறுதிப்பாட்டை ஆணித்தரமாகப் பதிவு செய்தது  தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் தொடர் ஆட்சிகாலத்துக்குப் பிறகு மிகமிகக் குறைவு. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவைத் தொடரில் இருதரப்பும் இணைந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உண்மையில் காந்திதான் ஒன்றிணைத்தாரா அல்லது மத்தியில் இருப்பவர்கள் பிளவுபடுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் திராவிடக் கட்சிகள் உஷாராகித் தங்களை வலுப்படுத்திக் கொள்கிறதா?. எதுவாக இருப்பினும் இது தொடரட்டும்.

-ஐஷ்வர்யாTrending Articles

Sponsored