'சின்னம்மா உடனே சாதிக்க வேண்டும் என மக்கள் நினைப்பது தவறு!' - செ.கு.தமிழரசன்Sponsoredரியலூர் மாவட்டம், செந்துறை, சிறுகடம்பூரைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த 16 வயது  சிறுமி நந்தினியை, இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இந்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நந்தினி உறவினர்களை சந்தித்து பேசிய இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது , "நந்தினியை இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் கடத்தி சென்று விட்டார் என அவரது தாயார் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸார், கடத்தல் என கொடுத்தால் புகாரை ஏற்க மாட்டோம். காணவில்லை என புகார் தருமாறுச் சொல்லி இருக்கிறார். அதன்பிறகும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்த உடன் விசாரித்திருந்தால் நந்தினியை உயிரோடு மீட்டிருக்கலாம். போலீஸ் அலட்சியமும் இதற்கு முக்கிய காரணம். கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் மீதான வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Sponsored


Sponsored


தொடர்ந்து நம்மிடம் பேசிய செ.கு.தமிழரசன், "மாணவர்களின் போராட்டத்துக்கு நான் தலைவணங்குகிறேன். ஆனால் ஒரு போராட்டம் வன்முறையாக திசைதிரும்பும் போது வேதனையளிக்கிறது. இதில் தவறு ஏற்பட்டிருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். போராட்ட களத்தில் அந்நிய சக்திகள் புகுந்து விட்டார்களா என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

நெருக்கடியான நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்றிருக்கிறார். அம்மாவிற்கு அடுத்தபடியாக கட்சியை கண்ணியமாக காப்பாற்றக்கூடிய திறமை சின்னம்மாவுக்கு மட்டுமே உள்ளது. அதனால் தான் கட்சி நிர்வாகிகள் பொதுச்செயலாளராக சின்னம்மாவை தேர்வு செய்துள்ளார்கள்.அவர் இன்னும் முழுமையாக துக்கத்திலிருந்து மீளவில்லை. அவர் உடனே கட்சியில் சாதிக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. இப்போது தான் நிர்வாகப் பணியை தொடங்கியுள்ளார். சிறப்பாக செயல்படகூடிய திறமை அனைத்தும் அவரிடம் உள்ளது. சிறப்பாக செயல்படுவார். சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ் செயல்படுவதாக சொல்வதில் துளியும் உண்மையில்லை. சின்னம்மாவும், ஓ.பன்னீர்செல்வமும் எல்லோரிடமும் இணக்கமாக விட்டுக்கொடுத்து போகக்கூடியவர்கள்," என்றார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்லாது, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித்தலைவர்களும் சின்னம்மா புராணம் பாடத்துவங்கியிருக்கிறார்கள்.

- எம்.திலீபன்,

படங்கள் : செ. ராபர்ட்.Trending Articles

Sponsored