நடுவுல கொஞ்சம் வைகோவை காணோம் - எங்க போனீங்க ராசா?Sponsoredவைகோ, இந்த நூற்றாண்டில் அதிகமா கலாய்க்கப்பட்ட அரசியல்வாதி இவராத்தான் இருப்பார். எல்லாரும் அரசியல் பண்ணா, அரசியல் இவரை மட்டும் தயவு தாட்சண்யம் இல்லாம வச்சு செய்யும். தமிழ்நாட்டுல, அமெரிக்காவிலே... ஐரோப்பாவிலே... புளூட்டோவிலேன்னு எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் முதல் ஆளா ஆஜர் ஆகி கருத்து சொல்லுவார் நம்ம வைகோ. சில சமயம் எதும் பிரச்சனையே நடக்கலைன்னா, 'என்னதான் ஆகிவிட்டது நம்ம ஊருக்கு' அப்படின்னு இவராவே எதாவது கருத்து சொல்லி பிரச்சனையை ஆரம்பிப்பார். போன வாரம் ஃபுல்லா தமிழ்நாடே ஜல்லிக்கட்டு பிரச்னைல தீவீரமா இருந்தப்ப இவர் மட்டும் 'செலிப்ரிட்டி வாழ்க்கை நொந்தது... எனக்கு என்ன வந்ததுன்னு' அமைதியா இருந்தார். இவர் ம்யூட்ல இருந்ததன் ரகசியம் என்னன்னு இப்பவரைக்கும் யாருக்குமே தெரியாது. திடீர் திடீர்ன்னு காணாம போற நம்ம வைகோவை பத்தி ஒரு அரசியல் ஆய்வுக் கட்டுரை இதோ. இட் இஸ் எ எங்க போனீங்க ராசா ஆர்டிக்கிள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமா போயிட்டு இருந்தப்ப 'என்னாச்சோ ஏதாச்சோ எருமை மாடு காணாம போச்சோன்னு' பீல் பண்ணி வைகோவும் அவரோட கட்சிக்காரங்களோட சேர்ந்து மதுரைல போரட்டம் பண்ணினார். 'வேர் இஸ் த போராட்டாம்... ஆ மதுரைல போராட்டம்ன்னு' எல்லாரும் ஒண்ணா கூடிப் புரட்சி பண்ண ஆரம்பிச்சாங்க. இன்னும் அவர் கட்சில ஆளுங்க இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா, எஸ் பாஸ்! இன்னும் கொஞ்சப் பேர் இருக்கத்தான் செய்யுறாங்க. அவங்க பண்ணின போராட்டம் எந்தப் பிரச்சனையும் இல்லாமா அமைதியா நடந்ததுக்கு அவரை நாம பாராட்டியே ஆகணும். பச்சே அவரோட பல தொண்டர்களுக்கே போராட்டம் நடந்தது தெரியாத அளவுக்கு அமைதியா பண்ணது எல்லாம் ரொம்பப் பெரிய தப்பு பாஸ். போராட்டம் பண்ண மாதிரியும் இருக்கணும் பண்ணாத மாதிரியும் இருக்கணும்னு முடிவு பண்ணித்தான் அவர் மதுரைல போராட்டமே நடத்துனார் போல.

Sponsored


மெரினால போராட்டம் முடியுறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்து ஆஜர் ஆகி 'ஜல்லிக்கட்டு போராட்டம் வெறும் போராட்டம் அல்ல... இது ஒரு புரட்சி' அப்படின்னு வண்டுமுருகன் ரேஞ்சுக்கு பீல் பண்ணி பேசியிருந்தார். பட் எப்பவும் வைகோ அரபுப் புரட்சி பத்தியும், ரஷ்ய புரட்சி பத்தியும் தான பேசுவாரு இதென்ன புதுசா மெரினா புரட்சி பத்திலாம் பேசுறார்ன்னு  சோஷியல் மீடியால அது வரைக்கும் அவரை கலாய்ச்சவங்க எல்லாம் லைட்டா கலங்கித்தான் போயிட்டாங்க. இப்படி புரட்சி பத்திலாம் நெருப்பாட்டம் பேசிட்டு மறுபடியும் வைகோ சைலண்ட் மோடுக்கும் போயிட்டார். ஆனா அவர் போராட்டத்துல ஈடுபட்ட ஸ்டூடண்ட்ஸுக்கு ஐஸ் வச்சது அப்பாலிக்கா ஐஸ் கிரிம் சாப்பிடத்தான்னு இப்ப விட்டு இருக்குற அறிக்கை மூலமா தெரியுது.

Sponsored


அதுவரைக்கும் வைகோ பண்ணது எல்லாம் வெறும் சமாச்சாரம். அதுக்கு அப்புறம் பண்ணதுதான் சூர சம்ஹாரம் ஆஃப் சமோசா ஜாங்கிரி. போராட்டம் முடிஞ்சு கொஞ்ச நாள்லயே ஊர்ல இருக்குற எல்லா யூத்தும் எடுத்த நல்ல பேரை வச்சு எதுனா பண்ணணும்னு ஐடியா யோசிச்சு இருக்கார். அதனால, இப்ப தமிழ்நாடு முழுக்க இருக்குற யூத்ல 20 லட்சம் பேரை அவரோட கட்சில சேர்க்க போறதா அறிக்கை விட்டு இருக்கார். ஊர்ல உள்ள இருபது லட்சம் இன்ஜினியருக்கு வேலை கொடுப்போமுன்னு சொன்னா கூட வைகோவுக்கு குட்நேம் கிடைக்கும் .20 லட்சம் யூத்தை எப்படி பாஸ் கட்சில சேர்ப்பீங்க? பசங்க பத்து பேர் சேர்ந்து ஒண்ணா கோவா டூர் போகவே பல வருஷம் ஆகும், இந்த லட்சணத்துல எப்படிங்க உங்க கட்சில சேர்வாங்க? மதிமுகவை மாணவர் திமுக அப்படின்ன்னு பேர் மாத்துற ஐடியா எதும் இருக்கா? ஆனாலும் 20 லட்சம் பேரா.... உங்களுக்கு ஆசை ரொம்ப அதிகம் ப்ரோ! இனி இதை வச்சே ஒரு மாசம் சோஷியல் மீடியாவுல ஓட்டுவாங்களே! நமக்கு எதுக்கு சார் இந்த வம்பு?


லோ.சியாம் சுந்தர்.Trending Articles

Sponsored