சீமான், கார்த்திக், சரத்குமார் - இவங்க எல்லாம் பழைய பன்னீர்செல்வமா வரணும்!Sponsoredடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தான் திரிகிள்ளிய மக்கள் நலக்கூட்டணி பலநாள்கள் தண்ணியில் ஊறிய சீனிவெடி போல நமுத்துப் போனதைப் பார்த்து, கண்ணீர் ததும்ப, 'நாங்கள்லாம் எப்படிப்பட்ட ஆளு... எங்க வரலாறு எப்படி.. இந்த கிரவுண்டெல்லாம் எங்களுக்குப் பத்தாதப்பு போங்க...' எனத் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டே கிளம்பிய  காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனே ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். மெரினாவில் தன்னெழுச்சியாகக் கூடியவர்களுக்குத் தலைமை தாங்கத் தான் தயாராக இருப்பதாய் அறிவித்து அரசியலில் எடுத்த ரிட்டையர்மென்ட்டை வாபஸ் பெற்றிருக்கிறார். 'அவரே வந்துட்டார்... சொல்லாம கொள்ளாம நீங்கள்லாம் எங்க சார் போனீங்க..?' என நம்ம முரட்டு அரசியல்வாதிகளைத் தேடினோம்... 

நட நட ராஜா : 
ஜெயலலிதா மறைவுக்குப் பின் கலகம் செய்ய முயற்சித்து நாலாபக்கமும் வாங்கிக்கட்டிக்கொண்டதோடு ஆட்டத்தை டிக்ளேர் செய்த வைகோ அடுத்து நியூ இயர், பொங்கலுக்குக் கூட ஊர்ப்பக்கம் காணோம். ஆல் டைம் மைக்குக்கு முன்னாலேயே நின்றபடி கழுத்து நரம்பு புடைக்கக் கத்தியவருக்கு 'என்னாச்சோ ஏதாச்சோ...'னு பதறித் துடிக்கிறார்கள் கழகக் கண்மணிகள்.  அப்படியே கிழக்குப் பார்த்து நடந்து வங்கக்கடல் எல்லைக்கே போய்விட்டாரா..? எனத் தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருக்கிறார்களாம். ஸ்லீப் மோடுக்குப் போன அண்ணனை எழுப்ப, 'எத்தியோப்பியாவிலே, மெக்ஸிகோவிலே... தலைமை இல்லாமல் தவிக்கும், நம் போராளிகளுக்குத் தலைமையேற்று வழி நடக்க (நடத்த!) வா தலைவா..!' எனத் தாயகத் தங்கங்கள் அலறி அலாரம் வைக்கிறார்கள். 'கிரேக்கத்தின் மதிற்சுவரில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த தலைவனுக்கு எத்தியோப்பியா எனும் வார்த்தை எக்கோ அடிக்க, கறுப்பு சால்வையை முன்னால் இழுத்துவிட்டுக்கொண்டு, அடுத்த டவுன் பஸ்ஸிலேயே தமிழகத்துக்கு விரைகிறார். 

Sponsored


Sponsored


'மெரினாவில் குவிந்த இளைஞர் கூட்டம் எனக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது. பிரேசிலிலே... (கூட்டத்தில் சலசலப்பைப் பார்த்து) சரி... கலிங்கப்பட்டியிலே ஆளும் அதிகாரவர்க்கத்துக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்திக் காட்டினோம். லத்தியைக் காட்டிப் பயமுறுத்திய காவலர்களைப் பார்த்துப் பின்வாங்காமல் போராடினோம். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசிய அதிகாரவர்க்கத்தை துச்சமென நினைத்து துளியும் கலங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறை வேன் வந்து கைது செய்து அழைத்துப் போகும்போதும் கூடச் சிறிதும் பின்வாங்காமல் வேனுக்குள் அமர்ந்தபடி அமைதிப் போராட்டத்தைத் தொடர்ந்தோம். இந்த உணர்ச்சிமிகு போராட்டத்தைத் தலைமைதாங்கி வழிநடத்த கொரில்லா பயிற்சி பெற்ற ஒரு போர்வீரன் வேண்டும். அன்பிற்குரிய நண்பர் சே-குவேராவிடம் யாம் குடித்த ஞானப்பால் அதற்குத் துணைபுரியும். என் பின்னால் வாருங்கள்...' எனப் பேசிவிட்டு சோடாவைக் குடித்தார். நிமிர்வதற்குள் மொத்தக் கூட்டமும் கலைந்து செல்கிறது. 

முருகனின் பேரன் : 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கூட்டத்தைக் கலைக்க, தடியடி நடத்தியதற்குப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகவேண்டும் எனக் கிளம்பிய சர்ச்சைகளுக்கு ரிப்ளை கொடுக்க மைக்கைப் பிடித்தார் அண்ணன் சீமான். 'பச்சைத் தமிழனைப் பதவிவிலக வைத்துவிட்டுப் பக்கத்து மாநிலத்தில் இருந்தா ஆள்பிடித்து வரமுடியும்?' என மூக்குக்கு நேராய்க் குறிவைத்துக் கேள்விகேட்டார் முப்பாட்டன் முருகனின் பேரன். போராட்டம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அலங்காநல்லூரிலே ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக அறிவித்து, போலீஸ்காரர்களை லாவகமாகத் திசைதிருப்பி, ரகசியத் திட்டம் போட்டு மேலூருக்குப் பக்கத்திலே காளைகளை அவிழ்த்துவிட்டுத் தமிழனின் தன்னிகரில்லாப் பெருமையைப் பறைசாற்றினார். இந்தப் போராளிகளுக்குத் தலைமையேற்க, வேறு ஆள் ஏன் வேண்டும்? வருகிறார் அண்ணன்... 

'போரட்டக் களத்தில் ராப்பூராம் தூங்காமல் விழித்திருக்கிறார்கள் என் தம்பிகள். எல்லோரும் முருகப்பாட்டனோட பேரப்பிள்ளைகள். ஆடு மாடுகளை தேசிய விலங்காக நான் அறிவிச்சதுக்காக மாட்டுக்கு ஒரு பிரச்னைன்னதும் போராட வந்து நிக்கிறான் தமிழன். அடுத்து ஆட்டுக்குட்டிகளுக்கு அல்சர் வந்தாக்கூடப் போராடுவான். 'அல்சர்' ஒரு வந்தேறி வியாதி. வருசத்துக்கு நாலு போகம் வெளைச்சல் எடுத்த நம்ம பாட்டன் என்ன வேளாவேளைக்கு செல்போன்ல குறிப்பெடுத்து வெச்சா சோறு தின்னான்? இங்கிலீஸ் வைத்தியத்தை எப்ப நம்ம வீட்டுக்குள்ள விட்டோமோ அப்ப வந்ததுதான் இதெல்லாம். இப்பத்தான் கோலா ங்குறான். ஃபேன்டாங்குறான். தம்பிகளா எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பனங்கள்ளும், பருத்திப்பாலும்தான். வேற எந்தப் பயலையும் நாம அண்டவிடக்கூடாது. இதோட இந்தப் போராட்டத்தை முடிச்சுறாம எல்லாத்துக்கும் போராட, உங்களையெல்லாம் வழிநடத்த அண்ணன் இருக்கேன். தமிழர்களின் உயிரையும், உடைமைகளையும் குடிக்க வரும் வந்தேறிக் குளிர்பானங்களை  நெம்பியெடுப்பார்கள் என் தம்பிமார்கள்...!'

'செல்கடிவ் இன்சோம்னியா' கார்த்திக் : 

நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக், வழக்கமாக மாசக்கடைசியில் மட்டும் கலெக்‌ஷனுக்கு வரும் ஆபீசர்ஸ்  போல எலெக்‌ஷன் சமயத்தில் மட்டும் அறிக்கை தட்டுவார். இந்த தடவை 'முழிச்சுக்கோ... கண்ணா பொழச்சிக்கோ...' குரல் காதில் கேட்க, கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டு வெளிச்சத்தைப் பார்க்கிறார். ' ஹேய்... ஏதாவது எலெக்‌ஷன் வருதாப்பா...' எனக் கேட்டுக்கொண்டே நெட்டி முறிப்பவருக்கு, கட்சியில் இருக்கும் ஒரு கைப்புள்ளைத் தொண்டன், 'உள்ளாட்சித் தேர்தல்தான் வருது ஒறவே...' எனப் பதில் கொடுக்கிறார். தேர்தல் எனும் வார்த்தைதான் நம்ம தலைக்கு எனர்ஜி டானிக். தொப்பியைத் தேடி எடுத்துத் தலையில் வைத்தபடி களத்துக்குக் கிளம்புகிறார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தலைமை தாங்கப்போவதாய் போகிறபோக்கில் ஒரு அறிக்கையைச் சாத்த, மொத்தக் கூட்டமும் தெறித்து ஓடுகிறது. 

மிஸ்டர் தமிழ்நாடு : 

வழிதவறிய ஆட்டுக்குட்டி போல திக்கும் புரியாமல், திசையும் தெரியாமல் நடுத்தெருவில் நிற்கிறார் நாட்டாமை. 'தலைமை தாங்கத் தொண்டர்படையும் இல்லை... பாசமாக அழைக்க அம்மாவும் இல்லை...  நாங்களே இப்போ மக்களுக்குக் கறிவேப்பிலை' எனக் கதறிக் கண்ணீர் வடிக்க, 'நாட்டாமை பாதம் பட்டா அங்கே வெள்ளாமை வெளையுமடி... நாட்டாமை கண்ணசைச்சா நாலு மழை பொழியுமடி... ஓஹஹோ....' என ரிங்டோன் அலறுகிறது. கட்சிக்கொடியை எடுத்துக் கண்ணைத் துடைத்துக்கொண்டே போனை எடுத்துக் காதில் வைத்தவர், 'சின்னம்மா கூப்பிடுறாங்களா..?' என எழுந்து நின்று, 'ஓ... சின்னம்மாவே கூப்டாச்சா..?' என 'யாருலே அங்க... பீச்சுக்குப் பூட்டுன வண்டியை போயஸுக்கு விடு...' என விருட்டென்று கிளம்புகிறார். 

- விக்கி Trending Articles

Sponsored