ஜெயலலிதா மரணம்... ரிச்சர்ட் பெயில் விளக்கம்... அப்போலோவுக்கு சில கேள்விகள்!Sponsoredப்போலோ நிர்வாகத்துக்கு,

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து செப்டம்பர் 2016 முதலே எழுப்பப்பட்டு வந்த மக்களின் சந்தேகங்களுக்கு அவர் மறைந்த இரண்டு மாதங்கள் கழித்து பொறுமையாய் முற்றுப்புள்ளி வைக்க முன்வந்ததற்கு நன்றி. தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலுக்கும் இந்தத் திடீர் சந்தேகத் தீர்ப்புக் கூட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதில் அளித்த டாக்டர் பாபு ஆபிரகாம், "டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக எக்மோ கருவி பொறுத்தப்பட்டது. ஆனால் கருவி மட்டுமே இயங்கியது ஜெயலலிதாவின் இதயம் இயங்கவேயில்லை" என்கிறார். அப்படியென்றால் ஜெ இறந்தது என்று? 4-ம் தேதியா அல்லது 5-ம் தேதியா? 4-ம் தேதி என்றால் அவரது இறப்பை அறிவிக்கத் தாமதம் ஏன்? அவரது நலனுக்காகவா அல்லது சிலரின் அரசியல் நலனுக்காகவா?

Sponsored


4-ம் தேதி இறந்தார் என்று டாக்டர். பாலாஜி கூறியதை வாய்தவறிச் சொல்லி விட்டார்  என்றே எடுத்துக் கொள்கிறோம்  ஆனால் வேறு சில அலுவலாக ரிச்சர்ட் சென்னை வந்தார் என்றார் அவர், ஆனால் டாக்டர் ரிச்சர்டோ தான் அரசு அழைத்து வந்தேன் என்றார். உண்மையில் யார் அழைத்து அவர் வந்தார்? யாரைக் காப்பாற்ற இந்தத் திடீர் வரவு?

Sponsored


"ஜெயலலிதாவின் படுக்கை அருகில் இருந்த பலபேரைத் தனக்குத் தெரியாது" என்கிறார் டாக்டர்.பாபு ஆபிரகாம். "எப்போது போனாலும் அங்கே சசிகலா இருந்தார்" என்கிறார் டாக்டர்.பியேல். வெளிநாட்டில் இருக்கும் மருத்துவர் குறிப்பிடும் பெயரைக் கூட அப்போலோவில் இருக்கும் டாக்டர்கள் அறிந்திருக்கவில்லையா?

"நான்தான் இங்கு இன்சார்ஜ் என்றாராம்" டாக்டர்.பியெல்."இல்லை இங்கு இன்சார்ஜ் நான் தான் என்றாராம் ஜெ."  இது நடந்தது டாக்டர்.பியெல் முதன்முதலில் ஜெ- விடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போது. ஆனால் அதே அக்டோபர் 1-ம் தேதி ஜெ-வை அப்போலோவில் முதன்முதலில் பார்க்கச் சென்ற ஆளுநர் அவரைப் பார்க்க முடியாமல் திரும்பி இருக்கிறார். டாக்டரிடம் சைகை மொழியில் பேசியவர், 'மாண்புமிகு' ஆளுநரைப் பார்க்காதது ஏன்?

காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும் டாக்டர்களே முடிவு செய்து கருவியை அகற்றினோம், செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தோம் என்றார் டாக்டர் பாபு ஆபிரகாம். மாநில முதல்வரின் உயிர் பற்றி முடிவெடுக்க அப்போலோ நிர்வாகத்துக்கு யார் அனுமதி தந்தது?  எப்போதும் அந்த அறையில் உடனிருந்த குடும்பத்தினர் அப்போது எதுவுமே சொல்லவில்லையா?

ஜெ. மரணப் படுக்கையில் இருக்கிறார் என்ற தனது டிசம்பர் 5ம் தேதி அறிக்கையில் கூட அவருக்கு என்ன நோய் இருந்தது என்று குறிப்பிடவில்லை, அப்போலோ தான் வெளியிட்ட அறிக்கைகளிலும் அவருக்கு இருந்த சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டதே ஒழிய நோய் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இறந்து இரண்டு மாதங்கள் கழித்து இங்கு முதலமைச்சர் மாற்றப்படும் நேரத்தில் ஜெ.வுக்கு ’செப்சிஸ்’ நோய் இருந்தது  அதன் பாதிப்பால் இறந்தார் என்று குறிப்பிடக் காரணம் என்ன?.

ஏன்? ஏன்? என்று எத்தனை முறை கேட்டாலும் சந்தேகமே இல்லை இயற்கையாய்தான் எல்லாமே நிகழ்ந்தது என்று எல்லா மருத்துவர்களுமே தெளிவாகத் திருப்பித் திருப்பிக் கூறுகிறார்கள். சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை. யார் சொல்லிக் கொடுத்து இதையெல்லாம் கூறுகிறார்கள்?

-ஐஷ்வர்யாTrending Articles

Sponsored