படபடத்து வெளியேறிய மணப்பாறை எம்.எல்.ஏ - அலறியடித்துத் தேடிய அ.தி.மு.கஅ.தி.மு.க  எம்.எல்.ஏக்கள் கூட்டம் 8-2-17 (இன்று) காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 10 மணிக்கு முன்பே எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் காத்திருந்தனர்.

Sponsored


சசிகலா கூட்டத்துக்கு வரும்போது மணி 11.30 ஆகிவிட்டது. காலையில் இருந்து வெறும் வயிற்றில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்களில் பலர் சோர்வாக இருந்தனர். அப்போது, கூட்டத்தின் பாதியிலேயே படப்படப்பு காரணமாக மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர், கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டார். 

Sponsored


சில நிமிடம் கழித்து உள்ளே எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் ஒருவர் குறைந்திருப்பதைக் கண்டுபிடித்தது கட்சித் தலைமை. அவர்களிடம் இருந்த பதிவேடு, மொபைல் எண்கள் ஆகியவற்றை வைத்து வெளியேறியது சந்திரசேகர்தான் எனக் கண்டுபிடித்துத் தேட ஆரம்பித்தனர். 

Sponsored


அரை மணி நேரம் கழித்து, அலுவலகத்தின் வெளியே டீக்கடை ஒன்றின் ஓரமாய் இளைப்பாறிக்கொண்டிருந்த சந்திரசேகரைக் கண்டுபிடித்து, உள்ளே தூக்கி வந்துள்ளனர். 'காலையில் இருந்து வயிறு காலியாக இருக்கிறது. எனக்குப் படபடப்பாகிவிட்டது. அதனால்தான் வெளியே வந்தேன்' எனச் சொல்லியிருக்கிறார். 'ஏன்யா..நாங்கதான் டீ வாங்கித் தரோம்னு சொன்னோம்ல.. அதுக்குள்ள என்ன அவசரம்!' என அவரைக் கடிந்துகொண்டனர் கட்சிப் பிரமுகர்கள். 

- பிரம்மாTrending Articles

Sponsored