யார் துரோகி? ஓ.பி.எஸ் டுவிட்டரில் பதிலடி #OPSVsSasikala #OpsSponsoredமறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்த்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "முதல்வர் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள். கட்சி நிர்வாகிகளும் மக்களும் விரும்பினால் எனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுவேன். என் முடிவில் உறுதியாக இருப்பேன்" எனத் தெரிவித்ததிலிருந்து தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கான @AIADMKOfficial-ல், #துரோகி என எழுதப்பட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் பகிரப்பட்டது. இதற்குப் பதிலடி தரும் விதமாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் @CMOTamilNadu என்ற டுவிட்டர் கணக்கில், "அம்மாவின் உண்மை தொண்டன் துரோகியா? மக்கள் முடிவு செய்வார்கள் யார் துரோகிகள் என்று" தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored