ஸ்டாலின், மோடி, கமல் - பன்னீர்செல்வத்துக்குப் பின் இருப்பது யாரு? #கபீம்குபாம் கதைகள்Sponsoredதிடீர்னு ஓ. பன்னீர்செல்வம் ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆனதைப் பார்த்துட்டு இவர் அந்தக் கட்சிக்காரங்க சொன்னதைக் கேட்டு இப்படிப் பண்றார், இந்தக் கட்சிக்காரங்கதான் இவரை இயக்குறாங்கனு ஆளாளுக்கு ஒரு கதை சொல்லிட்டு இருக்கிறாங்க. நம்ம பங்குக்கு நாமளும் சில குறியீடுகளை வெச்சு சரி யாராகத்தான் இருக்கும்னு கண்டுபிடிச்ச ரிசல்ட்ஸ்தான் இதெல்லாம்...

* மெரினாவுக்குப் போன ஓ.பி.எஸ். சும்மா பிரஸ்ஸைக் கூப்பிட்டு பேட்டி கொடுத்திருந்தா சந்தேகமே வந்திருக்காது. ஆனால் அவர் பாட்டுக்கு உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பிச்சுட்டார். தியானம்னா யோகாதான் ஞாபகம் வருது. யோகான்னு சொன்னாலே மோடியும், பி.ஜே.பி-யும்தானே ஞாபகத்துல வருது. இப்போ ஒருவேளை அப்படி இருக்குமோன்னு நினைக்கத் தோணுமா தோணாதா ஃப்ரெண்ட்ஸ்?

Sponsored


* உங்களுக்குப் பெரும்பான்மையான ஆதரவு இருக்குதா அடுத்து என்ன செய்யபோறீங்கனு கேட்டதுக்கு ஊர் ஊராக வீடு வீடாகச் சென்று ஆதரவு கேட்பேன்னு கொஞ்சமும் யோசிக்காம பதில் சொன்னார் ஓ.பி.எஸ். இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை...? ஆங்க்.. அதேதான். சில நாட்களுக்கு முன்னால் வீடு வீடாகப் போவேன்னு சொல்லி அதுக்கு 'நமக்கு நாமே'ன்னு பெயர் வெச்சு சைக்கிள்ல ஊர் சுத்துனாரே ஸ்டாலின்; அந்த ரெஃபரென்ஸ்தான் இது. ரெண்டையும் மேட்ச் பண்ணிப் பார்க்கும்போது சில பேர் சொல்ற மாதிரி இப்படியும் இருக்குமோனு யோசிக்கத் தோணும்தானே மக்களே?

Sponsored


* நீயா நானா யாரு தலைவர்னு உச்சக்கட்டமா இப்போ நடந்துட்டு இருக்கிற சண்டையைப் பார்த்தா, யாரு தலைவர்ங்கிற சண்டையைப் போட்டு மண்டையை உடைச்சுக்கிறதை மட்டுமே கொள்கையா வெச்சு அதையே பல வருசப் பணியாகவும் செஞ்சுட்டு இருக்கிற த.மா.கா-வைப் பார்த்துதான் இந்த  வித்தையை இறக்கியிருக்காரோனு நினைக்கத் தோணுது. ஹ்ம்ம்ம்ம்... . யாருக்குத் தெரியும் இருந்தாலும் இருக்கும்ல?

* ஏன் லோக்கல்ல மட்டும்தான் ரெஃபரென்ஸ் கிடைக்குமா நேஷனல் லெவல்லகூட இருக்கு மக்களே... ஆமா, சில நாள்களுக்கு முன்னாடி உத்தரப்பிரதேசத்துல முதல்வரா இருந்த அகிலேஷ் யாதவ்வைக் கட்சியில் இருந்தே  தூக்குச்சு சமாஜ்வாடிக் கட்சித் தலைமை. ஆனா நீங்க என்னய்யா என்னைத் தூக்குறதுனு இவர் தனியா பிச்சுக்கிட்டு வர மெஜாரிட்டியின் மூலமாகக் கட்சி சின்னமே இப்போ அகிலேஷ் கையில் இருக்கு. இதைப் பார்க்கும்போது ஓ.பி.எஸ்-ஸோட அந்தர் பல்டிக்குப் பின்னாடி ஏன் அந்த சமாஜ்வாடியின் தூண்டுதல் இருக்கக் கூடாதுனுலாம் எக்குத்தப்பா யோசிக்கத் தோணுது மக்களே. அவ்வ்வ்!

* அட அவ்வளவு ஏங்க... கட்சிகள் மட்டும்தான் காரணமா இருக்கணுமா என்ன? கமல்ஹாசன்கூட காரணமா இருக்கலாம். ஆமாங்க. இதுவரைக்கும் அதிகமா வாயைத் திறந்தே பேசாத ஓ.பி.எஸ்., ஸ்டாலினைப் பாத்து ஏன் சிரிச்சீங்கனு கேட்ட கேள்விக்கு 'சிரிக்காம இருந்தா அது விலங்கு. சிரிச்சாதான் அவன்  மனுசன்' னு தடாலடியாகப் பதில் சொன்னார். ஆமா இந்த வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு நினைக்கும்போதுதான் 'சிரிக்கத்தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர், ஸோ கலகலகலவென சிரி கண்ணில் நீர்வர சிரி'னு கமல்ஹாசன் சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. (அந்தப் பாட்டுகூட 'ஆளவந்தான்'ங்கிற படம்கிறது குறியீடுக்குள்ளேயே ஒரு குறியீடு.) பத்தாததுக்கு ட்விட்டர்ல அரசியல் பற்றி கருத்து மழையாகப் பொழிஞ்சிட்டு இருக்கார் கமல். இதை எல்லாம் வெச்சுப் பார்த்தா ஒருவேளை இப்படிக்கூட இருக்கலாமோன்னுலாம் நினைக்கத் தோணும்தானே மக்களே..?

- ஜெ.வி.பிரவீன்குமார்Trending Articles

Sponsored