ஓ.பி.எஸ். ஆதரவு பட்டியலை திரட்டும் ஐ.டி டீம்!Sponsoredமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா இடையே தமிழக அரசின் ஆட்சியைப் பிடிக்க கடும்போட்டி நிலவி வருகிறது. தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து இருவரும் ஆட்சியமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிரீன்வேய்ஸ் சாலையில் இருக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டின் முன், அவருக்கு ஆதரவு தெரிவிக்க வரும் அ.தி.மு.க. உறுப்பினர்களின் பெயர், தொலைபேசி எண், ஊர் மற்றும் பொறுப்புகளை, ஐ.டி. விங்கை சேர்ந்த உறுப்பினர்கள் குறிப்பெடுத்து வருகின்றனர். மேலும், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பற்றிய செய்திகளை உறுப்பினர்களுக்குத் தெரிவித்ததுபோல, ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு ஓ.பி.எஸ். பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக இந்த விவரங்களை கேட்டுப்பெறுகிறார்களாம்.

Sponsored


படம் - தே.அசோக் குமார்

Sponsored
Trending Articles

Sponsored