பன்னீர்செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி - சுப்பிரமணியன் சுவாமிSponsoredதமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கும் இச்சமயத்தில், 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தமிழக ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும்' என பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், பி.பி.சி - தமிழுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அவர் அந்தப் பேட்டியில், 'எல்லாம் சட்டப்படிதான் நடக்க வேண்டும். சசிகலாவைப்பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால் அவரது உரிமையை சட்டத்தை மீறி பறிக்க வழியில்லை. வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும். ஆளுநர் தவறு செய்திருக்கிறார். கண்டிப்பாக சென்னையில் இருந்திருக்க வேண்டும். அவர் தவறிழைத்திருக்கிறார். நிர்ப்பந்தத்துக்கு பயந்து ராஜினாமா செய்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி. முதலமைச்சர் ஆவதற்கு அவருக்குத் திறமை கிடையாது. அவருக்கு அந்த அந்தஸ்து கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் அளித்த ராஜினாமாக் கடிதத்தைத் திரும்பப் பெற ஆளுநர் ஒப்புக்கொண்டால், அவர் ஒரு முட்டாள்" எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored


இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.....

Sponsored
Trending Articles

Sponsored