ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாகப் பதிவான மிஸ்ட் கால்கள் எத்தனை தெரியுமா?Sponsoredபடம்ள் ஆ.முத்துக்குமார்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இடையே ஆட்சியைப் பிடிக்க கடும்போட்டி நிலவிவருகிறது. பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், இதுவரை 5 எம்.பி-க்கள் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் பொன்னையனும் நேற்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

Sponsored


இந்நிலையில், ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் 'மிஸ்ட் கால்' பிரச்சாரத்தை சில நாட்கள் முன் தொடங்கினர். ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் 92892 22028 என்ற எண்ணுக்கு 'மிஸ்ட் கால்' தரலாம் எனத் தெரிவித்திருந்தனர். இந்த பிரச்சாரம் தொடங்கிய 48 மணி நேரத்தில் இதுவரை 33 லட்சம் மிஸ்ட் கால்கள் பதிவாகியுள்ளதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாட்டிலிருந்து பதிவான 1.5 லட்சம் மிஸ்ட் கால்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored