ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய முதல்வர்Sponsored 


மிழ்நாட்டில் தற்போது சசிகலா தரப்புக்கும், ஓ.பி.எஸ் தரப்புக்கும் இடையே முதலமைச்சர் பதவிக்கான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று 76-வது பிறந்தநாள் கொண்டாடும் வித்யாசாகர் ராவுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதத்துடன் மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், 'உங்களின் 76-வது பிறந்தநாளான இந்த தருணத்தில், என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதற்காக உங்களுக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான ஆயுளை வழங்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்' என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளுநருக்கு சசிகலாவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored